ஐயா, Ex. பெரியார்தாசன் அவர்களே…!

சோமன் சார், இது உங்களுக்குரியதல்ல. நீங்கள் பத்மராஜனின் ஞான் கந்தர்வன்-ல் வரும் ‘தேவாங்கணங்கள்‘ பாடலைப் பார்த்துக்கொண்டிருங்கள்.  4:44ல் ஃபிலோமினா ஒரு சொட்டு கொடுக்கிறார் பாருங்கள், அதுதான் நான்! ஆனால் இந்தப் பதிவு ஹமீதுஜாஃபர் நானாவின் வேண்டுகோளுக்கிணங்க. வாஸ்தவத்தில் , பேரா. பெரியார்தாசனின் ‘மாறுதல்’ எனக்கு பெரும் பயத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. இறைவன் பெரியவன். அடுத்த பதிவு, கவிஞர் தாஜின் ‘சை-த்-தா-ன்’, இன்ஷா அல்லாஹ்!

*

பெரியார்தாசன்

ஹமீது ஜாஃபர்

இரண்டு தினங்களுக்குமுன் இணையத்தில் வலம் வந்தபோது ‘இஸ்லாம் கல்வி.காம்’ தளத்தை அடைந்தேன். அதில் சுற்றியபோது “நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” என்ற தலைப்பில் பெரியார்தாசனின் வீடியோ க்ளிப் இருந்தது. அதை பதிவிறக்கம் செய்து பார்த்தபோது ஏற்கனெவே த.மு.மு.க தளத்தில் சொல்லப்பட்ட செய்திதான் என்றாலும் இதில் சற்று விளக்கமாகவும் வேறு சில புதிய செய்திகளையும் சொல்லிருந்தார்.

என்னைப் பொருத்தவரை பெரியார்தாசனை தொலைக்காட்சி நிகழ்ச்சி விவதங்களில் மூலம் அறிந்தவன். ஒருமுறை நான் ஊரில் இருக்கும்போது ஒரு பொதுக்கூட்டத்தில் அவரது பேச்சை கேட்கமுடியாமல் போனதும் உண்டு. அதற்கு முன்பாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அப்துல்லா என்ற புதிய பெயரைவிட பெரியார்தாசன் என்ற பெயரே பலராலும் அறியப்படுகிறது. பெயர் எதுவாக இருந்தாலும் பெயரிடப்பட்டப் பொருள் அல்லது அதற்குரியவர் மாறாது இல்லையா? எனவே பெயரைப் பொருட்படுத்த வேண்டாம்.

அந்த ஒரு வினாடி, சேஷாசலம் என்ற பெயரை பெரியார்தாசன் என்று மாற்றிக்கொண்டபோது இது இத்தனை பிரபல்யமாகும் என்று அவர் எண்ணிக்கூடப் பார்த்திருக்கமாட்டார். ஆனால் இன்று பெரியார்தாசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதில் ஒரு சாராருக்கு மகிழ்ச்சியும், மறு சாராருக்கு துக்கமும், இன்னொரு சாராருக்கு கோபமும் இருக்கலாம். எது யாருக்கு எப்படி இருந்தாலும் அவர் சொல்லும் காரணம் என்னை சிந்திக்க வைத்தது. எங்கள் ஹஜ்ரத் சொன்னது ஞாபத்திற்கு வந்தது.

இறைவன் இல்லவே இல்லை , எல்லாம் இயற்கையாகவே நடக்கிறது என்ற நாத்திகம், ஒரு வினா – ஒரேயொரு வினாவில் அந்த கொள்கை சுக்குநூறாக உடைத்தெறிக்கப்படுவது நியதிபோலும். ஆம் சற்றேறக்குறைய 850  ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு அறிஞருக்கும் இந்த நிலைதான் ஏற்பட்டது. இவரைப்போல் அவரும் ஒரு பேராசிரியர்; இவர் மனோதத்துவத் துறை, அவர் தத்துவத்துறை; இவர் சென்னைப் பல்கலைக் கழகம், அவர் பாக்தாத் பல்கலைக் கழகம். அந்தப் பேராசிரியர் தன்னுடையக் கொள்கையை யாரிடமும் திணிப்பதில்லை, தானாக யாரிடமும் வாதம் செய்வதுமில்லை. மாறாக யாரும் வாதம் செய்தால் அதை விடுவதில்லை, வெற்றி கொள்வது அவராகவே இருந்தது. ஆகவே எல்லோரும் அவருடம் வாதிப்பதற்கு பயப்பட்டார்கள்.

ஒரு மாலைப் பொழுது அவரிடம் பயிலும் மாணவன் சந்தேகம் கேட்பதற்காக வீட்டிற்கு வந்தான், அப்போது அவர் ஆரஞ்சுப் பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அங்கே ஓர் உரையாடல்….

“சந்தேகம் கேட்பதற்கு முன் இந்த ஆரஞ்சுப் பழங்களில் ஒன்றை சாப்பிடு இது மிகவும் சுவையுள்ளது, என் வீட்டுத்தோட்டத்தில் விளைந்தது.”

“உங்கள் வீட்டுத் தோட்டத்தில் விளைந்தது எல்லாம் இனிப்பானது என்று எப்படி சொல்லமுடியும்?”

“இது ஒருமரத்துப் பழம், எனவே இனிப்பானது.”

“ஒரு மரத்துப் பழம் இருவகை சுவையுள்ளது என்பது உங்களுக்குத் தெரியாததா?”

“நீ சொல்வது உண்மைதான், நான் சுவைக்கும் இந்த பழத்தின் சுளை ஒன்றை சாப்பிடு, இது இனிப்பானது.”

“ஒரு பழத்தின் ஒரு பகுதி இனிப்பாகவும் மறுபகுதி புளிப்பாகவும் இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாத செய்தியல்லவே.”  என்று அந்த மாணவனிடமிருந்து வந்த பதிலினால் அப் பேராசிரியர் சற்று இடிந்து போனார்.

“அப்படியானால் நான் சுவைக்கும் சுளையின் ஒரு பகுதியைத் தருகிறேன், சுவைத்துப் பார்.”

“நீங்களும் நானும் ஒரே மாதிரியாக சுவையை உணர்வோம் என்று என்ன நிச்சயம்?”

மேற்கொண்டு அப்பேராசிரியரால் எதுவும் பேசமுடியவில்லை. எவராலும் வெல்ல முடியாத தன்னை ஒரு மாணவன் வென்று விட்டானே என்று கோபம் கொள்ளவில்லை. மாறாக சிந்திக்கத் தொடங்கினார். விளைவு? தான் கொண்டிருந்தக் கொள்கை எதற்கும் உதவாது என்று தூக்கி எறிந்தார். அதன் பிறகு உலகுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தார். அவருடைய பொக்கிஷங்களில் முக்கியமானது ‘உயிரோட்டமுள்ள மார்க்க அறிவு’ என்று பொருள்படக்கூடிய ‘இஹ்யாவு உலுமித்தீன்’.  அந்த பேராசிரியர் வேறு யாருமல்ல ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் என்று பாராட்டப்படும் இமாம் கஜ்ஜாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி.

அதேபோன்று , 45 ஆண்டு காலமாக இறைவன் இல்லை என்ற கொள்கையைப் பரப்பி வந்த இந்த பேராசிரியரை ‘இயல்பிலேயே ஒருவன் இறை மறுப்பாளனாகப் பிறக்கமுடியாது – இறை மறுப்பாளனாக ஒருவன் இறக்கக்கூடாது’  என்ற செய்தி மாற்றிவிட்டது. அன்று அவரிடம் மாணவன் கேட்டான், இன்று இவரிடம் இவரது பால்ய நண்பர் சொல்லிவிட்டு பதிலைக்கூட எதிர்பார்க்காமல் சென்றுவிட்டார்.

ஐயா , பேராசிரியர் அவர்களே! நீங்கள் இஸ்லாத்தில் இணந்தது எங்களுக்கு பெருமைதான் என்றாலும் என் மனதுக்குள் ஒரு பயம் நிலவி வருகிறது. இது சுன்னத், அது ஹராம், இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யக்கூடாது  என்று இலவச அறிவுரை சொல்ல சில அரைகுறை ஆலிம்கள் வருவார்கள். உங்களுக்கே தெரியாமல் உங்களை மூளைச்சலவை செய்வார்கள். நீங்கள் மனோவியல் பேராசிரியர் மட்டுமல்ல சிகிச்சையாளரும்கூட, எனவே குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய்ந்ததுபோல் அவர்கள் சொல்வதையும் ஆய்ந்து ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இது ஒன்று.

மற்றொன்று, ‘இறைவன் ஒருவன்தான், அவனுக்கு இணைவைக்கக்கூடாது, அவனுக்கு இணையாக எதுவுமில்லை’ என்ற செய்தி நபிகளாருக்குப் பிறகு இந்திய துணைக்கண்டம் முதல் எல்லா நாடுகளுக்கும் பரப்பியவர்கள் ஒரு சிலர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் இறை தியானத்தில் மூழ்கி மக்களின் வாழ்க்கை முறை, உணவு, நாகரீகம், பண்பாட்டுமுறை இவைகள் அனைத்தையும் மாற்றி நேர்வழிப் படுத்தியவர்கள். சுருக்கமாகச் சொன்னால் இறைவன் சொன்னதை, நபிகளார் சொன்னதை மக்களின் அறிவுக்குத் தகுந்தவாறு போதனை புரிந்தவர்கள். சூஃபிகள் என்றழைக்கப்படும் இவர்களை சிலர் தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

*

நன்றி : ஹமீது ஜாஃபர்
மின்னஞ்சல் : manjaijaffer@gmail.com

6 பின்னூட்டங்கள்

 1. sadakka said,

  10/04/2010 இல் 09:29

  Nowhere mentioned in the Quran or Hadees to ‘தங்கள் வாழ்நாள் முழுவதையும் இறை தியானத்தில் மூழ்கி ‘

  Islam is the easiest religion to follow and practice. All has asked to do any activity on limited basis.

 2. 10/04/2010 இல் 11:45

  //‘இயல்பிலேயே ஒருவன் இறை மறுப்பாளனாகப் பிறக்கமுடியாது – இறை மறுப்பாளனாக ஒருவன் இறக்கக்கூடாது’//

  இயல்பிலேயே ஒருவன் இறை நம்பிக்கையாளனாகப் பிறக்கிறானா? எந் நம்பிக்கையும் இல்லாமல் பசி என்கிற பிரச்சனையுடன் மட்டும் பிறக்கும் உடலை.. பட்டினப்போட்டுக் கொல்லாத எதாவது மதங்கள் உண்டா? மதம் என்பது மதநூல்கள் அல்ல. மதம்சார்ந்த மனிதர்கள்தான். “வயிற்றிக்கு சொறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கு எல்லாம். பயிற்றிப் பலகல்வி தந்தே இந்த பாரை (bar-ஐ அல்ல) உயர்த்திட வேண்டும்.” போய் முதல்ல புள்ளைங்கல படிக் வைக்கச் சொல்லுங்க…

  காகிதங்களை தின்றுவாழ மனிதர்கள் என்ன கழுதைகளா? ))) எப்படி நம்ம எதுகை மோனை… நாங்களும் ஆபிதின் ஊர் காத்து வாங்குனவங்கத்தான் காக்கா? ஓ.. நானா? )))

 3. 10/04/2010 இல் 12:03

  //பலகல்வி தந்தே இந்த பாரை (bar-ஐ அல்ல) உயர்த்திட வேண்டும்//
  ஜமாலன், BAR உயர பார் உயரும்!

 4. 10/04/2010 இல் 16:50

  முதலில் ஜமாலனுக்கு,

  பாரில் உயரும் ஜமாலன் சார், உங்கள் மீது அடிக்கும் காற்று என்மீதும் பட்டுக்கொண்டிருக்கிறது.

  அடுத்து சதக்கா அவர்களுக்கு,

  மீண்டும் ஒருமுறை குர்ஆனையும் ஹதீஸையும் (ஆழ்ந்து)தேடிப்பாருங்கள் கேட்பது கிடைக்கும். தவிர ‘வாழ்நாள் முழுவதும்’ என்பது 24X7 அல்ல ‘வாழ்வில் பெரும்பகுதி’ என்று பொருள். ‘அவன் கை நீண்டுவிட்டது’ என்றால் இன்று இரண்டடியாக இருந்த கை நான்கடியாக நீண்டுவிட்டது என்றா பொருள்கொள்வீர்கள்?

 5. 11/04/2010 இல் 12:59

  //
  சூஃபிகள் என்றழைக்கப்படும் இவர்களை சிலர் தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
  //
  சூஃபிக்களைச் சரியாக சித்தரிப்பவர்கள் யார் ?

  சூஃபிக்களின் மீது நல்லபிப்ராயம் உள்ளவர்களில் நானும் உள்ளேன். ஆனால் அவர்கள் வழியில் நடப்பவர்களாகக் கூறிக் கொள்ளும் சிலரிடம் உள்ள சில வெளிப்படையான ஷிர்க்குகளை, அச் சூஃபிக்களின் போதனைப் படி வாழும் மற்ற சூஃபி-வழியாளர்கள் கண்டித்து ஏதேனும் முயற்சி செய்துள்ளார்களா ?

  இத்தகைய கண்டிப்புகள் அனைத்தும் சூஃபி வழிச் சிந்தனையற்றவர்களிடமிருந்தே வருகிறது, நான் கவனித்தவரை.

 6. 12/04/2010 இல் 16:06

  உண்மையான சூஃபியாக்கள் நேரான வழியிலேயே அனைவரையும் அழைத்துச் சென்றார்கள் சென்றுகொண்டும் இருக்கிறார்கள். ஆனால் நானும் சூஃபி என்று சொல்லிக்கொள்ளும் சில தறுதலைகளால் எல்லோருக்கும் இழுக்கு ஏற்படுவது இன்று மட்டுமல்ல முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது. ‘பெரியப் பெரிய தாடி வைத்துக்கொண்டு தஸ்பிஹ் மணி உருட்டும் கள்ளப் பயல்கள்…’ என்று பீர்முஹம்மது அப்பா அப்போதே சாடியிருக்கிறார்கள்.

  அரை கண் மூடிய பார்வை, நொடிக்கொரு அல்ஹம்ந்துலில்லாஹ், ஹஸ்தக்ஃபிருல்லாஹ் சொல்லும் அவர்களுக்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது. எப்படி தடுக்க முடியும்? நாம்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s