அஜ்மீரில் வாழும் ரோஜா!

என் மதிப்பிற்குரிய , நாகூர் தர்ஹா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் மாமா அவர்களின் ஒரு பாட்டு – ‘புஹாரி’யை விரும்பும் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க. அஜ்மீர் ரோஜா பற்றி நாகூர் ராஜா 🙂

11 பின்னூட்டங்கள்

 1. 06/04/2010 இல் 16:04

  ஆபிதீன் நான் அடியில் கை விடுவதுபோல் நீங்க எங்கே கைவிட்டு இதையெல்லாம் எடுக்கிறீங்க? எஸ் எம் ஏ காதர் மாமாவுடைய ஒர்க்கை இணையத்தில் போடனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை இருக்கு.

 2. soman said,

  08/04/2010 இல் 04:19

  கேட்டாச்சு…. ரொம்ப நல்லா இருக்கு.

  யால்ல்லா…ஹ். !!! வேறென்ன சொல்ல.

  ‘ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா’ படத்தில் ப்ரமதவனம் பாட்டு முடிந்ததும்,

  அந்த கௌதமிப்பொண்ணு ரியாக்ட் பண்ணற மாதிரி ஒரு சீன் இந்த இடத்தில் வைக்கலாம்”…….

  அப்புறம் நம்ம சரத் உண்ணி ஜுகல்பந்தி பழைய “சிவசங்கரி……, சிவானந்த லஹரி …..சிவசங்கரி ”

  சீர்காழியும், (இன்னொண்ணு மறந்து போச்சு) மற்றவரும் பாடிய ஒரு பாடல் கேட்டு திணறி இருக்கிறேன்.

  சின்னப்பொ.

  எல்லப்பயலுவளும் கூடிப்பேசிட்டுல்லா நம்மள சங்கீதத்துல தள்ளி இருக்கானுவ…எய்யான்னு இருக்கு.

  ரொம்ப இழுத்தா மறுமொழிக் கோவணம் தொங்கிப்போயிரும்னு ஸ்டாப். சரியா… அப்பப்போ நம்ம

  நம்ம வீட்டுக்கும் வந்து போங்க.

  அன்புடன் சோமன்.

 3. soman said,

  08/04/2010 இல் 04:57

  ரஷீத் கான் ஸ்ருதியில் லயிக்கும் அழகுக்கு ஈடு இணை இல்லை. கேட்டிராத காதுகள் பாவம் செய்தவை.

  ” இதோ இந்த பாட்ட கேட்டு பார், இந்த பாட்டுக்காரன் வயசு என்ன தெரியுமா… இவன் வாத்தியார்

  இன்னும் ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு தான் நீ பாடவே ஆரம்பிக்கணும்ன்னுருக்கார். ” என்று ஒரு தடவை

  அதை எனக்கு அடையாளம் செய்தபோது என் குரு சொன்னது சத்தியம் என்று தோணிற்று.

  அந்த — தக்குபீ…….ர் முழக்கம்., ஈஈச்சை மரத்து இன்பச்சோலையில், தீன் குலப் பொண்ணு

  எல்லாம் நம்மை படாத பாடு படுத்திய பாட்டுகள் ஆச்சே.

  கொஞ்சமா அந்த பழைய ஞாபகங்களையும் எழுதுங்களேன்.

  “சொல்ல முடியாத மன உளைச்சல்” என்ற வரி ஒரு க்ஷணம் என்னை அழப்பண்ணியது.

  அளவிட்டு சொல்லவா, வெளியில் சொல்ல முடியாததா, என்று கலங்கிற்று மனசு.

  பிடிச்ச பொம்பள பிள்ளை “முடியலப்பா” ன்னு சொல்லும்போது, ஏத்தா, நான் இல்லையான்னு

  முகவாய் தாங்கிக்கும் தகப்ப பாவம் மேலிடுகிறது.

  திரும்பவும்,…………..யா..ல்லா..ஹ்.

 4. 08/04/2010 இல் 05:34

  சோமன், உங்க வீட்டுக்கும் போனேன். (போவலேன்னா ‘பொளேர்’னு அப்பிடுவீங்களே!) . பெரிய இசை ரசிகராக இருக்கிறீர்களே, சந்தோஷம். ரஷீத்கானின் முழுக்கச்சேரி இணையத்தில் கிடைக்கவில்லை – இலவசமாக. என்னிடமுள்ளதை போடலாமெனில் இடப்பற்றாக்குறை. செய்யலாம், செய்யலாம் மெதுவாக. அப்புறம்…என் மனநிலை பற்றி கவலைப்படாதீர்கள். துஆ செய்யுங்கள். அது போதும். நன்றி.

 5. soman said,

  08/04/2010 இல் 08:44

  அதில், “அந்த அரபிக்கடலோரத்துக்கு” ஒரு உம்ம வைக்கலாம்.

  துள்ளி விட்டது மனசு. கோர்த்து விட்டுருக்கார் ரெஹ்மான். சும்மா.

  “நாதவிந்துகலாதி” ன்னு ஒரு ஹிட்டான திருப்புகழ் பாடல்.

  மெட்டு இவங்கப்பவோடது தான்னு முதலில் தெரியாமல்.,

  அந்த “என்வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்” பாட்டை

  கேட்டுவிட்டு அய்யய்யோ இந்த படுபாவிகள் திருப்புகழ் மெட்டை

  திருடி காதல் பாட்டில் போட்டு விட்டார்களே..ம்ம்.. கலி ! ” என்று

  சபித்திருக்கிறேன்.

  ஊரில் இல்லாத போது வந்துட்டு போயிட்ட்டாரே நண்பர் என்று

  வெட்கமாக இருக்கு.

  ………………………………………………………………………………………………………..

 6. 08/04/2010 இல் 16:40

  என்னதிது விட்டால் ரெண்டு பேரும் ஜூகல் பந்தியே நடத்தி வைத்து விடுவீர்கள் போலிருக்கு. ஆஹா இது கூட நல்ல தானிருக்கு.

  “சின்ன மணிக்குயிலே” என்ற பாட்டில் ஒரு FULUT வந்து வந்து போகும். பிலால் கூட “பார்ரா தூக்கி கொடுக்கிறான்” என்பார். எனக்கு அப்ப அது வித்தியாசமாய் படும்.

  பிறகு ஒரு நாள் நான் உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் போதும் “மாலையில் யாரோ மனதோடு பேச” பாட்டில் ஒரு கிட்டார் வந்து வந்து போகும். அப்ப நீங்களும் இதையே தான் சொன்னீர்கள். எனக்கு சிரிப்பாய் வரும்.

  எப்படி இது சாத்தியமாகிறது. நமக்கெல்லாம் ஏன் இதை பற்றி இப்படி சொல்ல வரவில்லை என்று ஒரு ஆதங்கம் எழும். இசை பற்றி கைவர பெற்றவர்களுக்கு தான் அதெல்லாம் புரிபடும் என்று உணர்ந்து கொள்வதுண்டு.

  பட்டின பிரவேசம் படத்தில் வீட்டிலிருக்கும் காற்றாடி ராம மூர்த்தியிடம், வெளியில் தூரத்திலிருக்கும் சரத் பாபு, போனில் எல்லாம் பேசிவிட்டு லைட் எரியுதா, off பண்ணிட்டு தூங்கு என்பார். இங்கே லைட் எரியிரது அங்கிருப்பவருக்கு எப்படி தெரியுது. “எல்லாம் படிச்சவங்க படிச்சவங்க தான்” என்று காத்தாடி வெள்ளேந்தியாக புலம்புவார். அது மாதிரி தான் என் பாட்டு ரசனை படும் பாடும். ஹும்

  இப்பவும் இது போல் இசை பற்றி பேசி மகிழ நண்பர்கள் கூட்டம் நம்மை சுற்றி இல்லையே என்று மனம் ஆதங்கப்பட்டாலும், இப்படியெல்லாம் நீங்கள் எல்லோரும் எழுதிக்கொள்வதை
  படிக்கும் போது மனம் சற்றே ஆறுதல் அடைகிறது. இதை எல்லாம் எழுதி மாளாது ஆபிதீன்.
  .
  இசை பற்றி பேசி மகிழ ஒரு இடுகை போதாது, நீளும்… ஆகவே நண்பர்களே அன்பர்களே பெரியோர்களே இத்துடன் என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்.

  அன்புடன்
  அப்துல் காதர்

 7. Barakathullah said,

  09/04/2010 இல் 18:19

  Adi aathi…ennaa oru paattu… arputham… arumai…. ippothan mudhal muraiyaga SMA Kader avargalin gambeera kuralai ketkum vaippu kidaichuthungo…. suththa sangeetham… pure classical… wonderful… Abidheen Kakka ungalukku oru special thanks.

  Barakath, Abu Dhabi
  050 7917626

  • abedheen said,

   15/04/2010 இல் 05:21

   நன்றி பரக்கத். பாராட்டுக்கு நன்றி. உங்கள் பின்னூட்டம் ‘spam’ல் இருந்தது. அதனால்தான் பதில் சொல்ல தாமதம். SMA காதர் மாமாவின் முழுக்கச்சேரியே என்னிடமுண்டு (சின்னமாமாவின் ரிகார்டிங் கடையை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது – அவர்களைக் கெஞ்சி- எடுத்தது) . கொஞ்சம் Audio Editing தேவைப்படுகிறது. நேரமும் கிடைக்கவில்லை. அதை செய்துமுடித்து, பிறகு பதிவேன், இன்ஷா அல்லாஹ். காதர்மாமாவின் வீடியோ க்ளிப் அவர்களின் மகனாரும் என் நண்பருமான நூர்சாதிக்கிடம் இருக்கிறது. அதையும் வலையேற்ற வேண்டும். துஆ செய்யுங்கள்.

 8. 10/04/2010 இல் 05:16

  சோமன் சார், ‘நாதவிந்து..’ ரஹ்மானின் அப்பாவுடையதா? ! நல்லவேளை சொன்னீர்கள். நானும்தான் திட்டிக்கொண்டிருந்தேன். அந்த ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’வில் ‘தேவசபா..’ பாட்டிலும் நம்ம சரத் இருக்கிறார் – சுஜீத் என்ற பெயரில். தெரியும்தானே? ஆனால் அவர் குரல் நெடுமுடிக்கா அல்லது கய்த்தபுரத்திற்கா (பெயர் சரிதானே?) என்று எனக்கு குழப்பம். ரவீந்திரனிடம் இப்போது கேட்கவும் முடியாது. சந்தேகம் தீருங்கள் ப்ளீஸ்.

  காதர், நீங்கள் எழுதுவதையும் ரசித்தேன். ஆனால் நான் இப்போது ரொம்ப கெட்டுப்போய்விட்டேன். ‘தூக்கிக் கொடுப்பது’ என்றால் நான் வேறுமாதிரி அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்!

 9. 10/04/2010 இல் 15:01

  ஹூம்…இன்னும் அதே(!) நினைப்பு தானா. குழந்தைகளை காட்டிக்கொடுக்கிற வயசு வந்தாச்சு (அல்லாவே இப்படி சொன்னா வாழும் வயசு தெரிந்து போயிடுமோ). திருந்துங்க சார். (அது சரி நாம திருந்திட்டுல மத்தவங்களை திருத்தணும். என்னமோ போங்க ஏதோ சொல்ல நினைத்தேன் மறந்துட்டேன். ஹி..ஹி)

  அறிவுறுத்தல்களுடன்
  அப்துல் காதர்

 10. 06/10/2010 இல் 15:46

  ஆபிதீன் காக்கா, சலாம். இப்பத்தான் உங்கள் பதில் பார்த்தேன். நன்றி. அன்புகூர்ந்து SMA காதர் அவர்களின் முழு இசைப்பதிவுகளையும் சீக்கிரம் இணையத்தில் உலவ விடுங்கள். அவரின் இசை உலகம் முழுவதும் பரவ வேண்டும். மகத்தான பாடகர். இசை ஞானம் மிக்க மேதை. இஸ்லாமிய சமுதாயத்தில் இப்படி ஓர் – முறைப்படி கர்னாடக சங்கீதம் பயின்ற – சாதனையாளர், எனக்குத்தெரிந்து யாரும் இல்லை. அவரின் சுகமான சாஸ்திரிய சங்கீதம் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s