தெய்வங்களில் நீ அழகு கதிர்வேலனே!

தலைப்பிற்காக என்னைத் தள்ளிவைத்து விடாதீர்கள் 😉  ‘தெய்வமய்யா இந்த தெய்வநாயகம்‘ என்று சொன்னதற்கே , ‘ஷிர்க்’ என்று சீறியவர்கள் நீங்கள். ஆமா, ‘தெய்வ’நாயகத்தை எப்படிங்க சொல்வது, ஷிர்க்நாயகம் என்றா? எனக்கு பிடித்த பாடல்களுள் ஒன்று இது. முன்பு பதிவு செய்ததை யூடியூபில் போடனும் என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன். இயலவில்லை. இன்று ‘sarath music’ என்று கூகுளில் அடித்தபோது நல்வாய்ப்பாக வந்து விழுந்ததைப் பதிகிறேன் . சென்றவருடமே சில நண்பர்கள் இதைப் பதிந்துவிட்டாலும் என் பக்கத்திலும் இருக்கவேண்டும் என்பதற்காக மீண்டும் இங்கே. செங்கதிரின் ஒளி அழகு , செந்தமிழின் சொல் அழகு , தெய்வங்களில் நீ அழகு ,கதிர்வேலனே! நாதங்களில் ஓம் அழகு , மாதங்களில் தை அழகு , கூர்மையிலும் வேல் அழகு, சிவமைந்தனே!

என்ன மணி சார், இப்போது திருப்தியா? ‘சரவணப் பொய்கையில் நீராடி’ஐ கேட்பதுபோலவே இதையும் மொபைலில் கேட்பேன் -தினமும். இசைக்கு முன் மதமாவது மண்ணாங்கட்டியாவது! இப்போதைய விருப்பம் , ஆசியாநெட்டின் ‘ஐடியா ஸ்டார் சிங்கர்’ அல்ல; கைரளியின் ‘கந்தர்வ சங்கீதம்’தான். ப்ளஸ் 1 படிக்கிற ஒரு பொடியன் , சோனுநிகாமின் ‘ஸூனா ஸூனா‘வை ரகளை செய்தான் போன வாரம். 99 மார்க்!

திருவனந்தபுரம் , கொச்சின் ஏர்போர்ட்டில் இறங்கினால் மலையாளிகளை ‘மைக்’ஓடுதான் பார்க்க முடியும் போலிருக்கிறது!

முக்கிய குறிப்பு : பதிவிட்ட மறு நிமிடமே அந்த யூடியூப் அழிக்கப்பட்டு விட்டது! (என்னே தெய்வத்தின் கருணை!). எனவே என்னிடமுள்ள சிறிய 3Gp கோப்பை MediaFire-ல் ஏற்றியிருக்கிறேன்.  இந்தச் சுட்டியிலிருந்து தரவிறக்கம் செய்து மொபைலில் கேளுங்கள். நன்றி.

*

பிற்சேர்க்கை  : தெய்வத்தின் கருணையே கருணை! வேறொரு சுட்டி மூலம் காணொளி கிடைத்தது . கண்டு மகிழ்வீராக!

 

12 பின்னூட்டங்கள்

 1. 03/04/2010 இல் 14:03

  எப்படிய்யா இங்கே தொட்டு அங்கே தொட்டு ZIGZAGIL வருகிறீர். ஆச்சர்யம் தான். இதெல்லாம் உம்மால் தான் முடியும் போலிருக்கு. ஹும். நாங்களெல்லாம் படித்தே பிரமித்து போய் உட்கார்ந்திருக்கனும். ஆமா சொல்லிட்டேன்.

  அன்புடன்
  அப்துல் காதர்

  • soman said,

   06/04/2010 இல் 04:32

   புஹாரி வாசனை கொடலைபுடுங்கினாலும் எப்பவாச்சும் நீர் நல்லா எழுதுவீர் என்று

   நம்பினது வீண் போகலை. கொஞ்சம் இசை பக்கம் வருகிறீர். கொஞ்சம்பேர், (கொஞ்சம் அல்ல நிறையவே) நீர் ஏதாச்சும் எழுதக்கூடாதா நிறைய என்று இருக்கிறார்கள்.

   சஞ்சய் சுப்பிரமணியம் இசை பிடிக்குமா? தமிழ் பாடும் ஆசாமி என்பதால் மட்டுமல்ல

   சிறு பத்திரிகைகாரங்கள் கொண்டாடுகிறார்களே என்று தான் கேட்டேன்.

   நிறைய எழுதலாம். நீங்க. இந்த வட்டார வழக்கு துப்பட்டாவை அழித்து எரியுங்க.

   எவ்வளவோ நல்ல பாட்டு எல்லாம் இருக்கு. சங்கீதத்தில் நீர் விரல் சுட்டிய இடம்

   (கடை) ஒரு சோறு.

   நிஜமான தேடலும், தேர்ந்த சொல்லாளுமையும், கைவரப்பெற்ற மண்ணில் எந்த எழுது விதையும் வீணாவதில்லை.

   • 06/04/2010 இல் 06:30

    அன்பு சோமன், என்மேல் பலர் நம்பிக்கையோடு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சொல்ல இயலாத மன உளைச்சல்களில் சிக்கியிருக்கிறேன். அதனால்தான் எழுத கஷ்டமாக இருக்கிறது. எழுதுகிறேன், இன்ஷா அல்லாஹ். (இது சொல்லலாம்தானே?!) .

    சஞ்சய் சுப்ரமணியம் எனக்கும் பிடிக்கும்.

 2. 03/04/2010 இல் 18:44

  தெய்வம்+நாயகம்=தெய்வத்தின் நாயகம். அதாவது நாயகத்தெய்வம். நாயகம் என்றால் எங்கள் ரசூல்(சல்) அவர்கள்தான் என்று கொடிபிடித்துக்கொண்டு இந்த வஹாபிகள் வந்தாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை.

  இவனுவெல்லாம் ஒரு மாதிரியான மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருக்கிறானுவ. இவனுவ தலைவன் நல்லா கொள்ளையடிச்சுக்கிட்டு சுகமா இருக்கிறான். அவன் தொப்பிப் போட்டுக்கிட்டு இவனுவ தொப்பியை கலட்டிவிட்டுட்டான். அதாவது நான் எல்லோருக்கும் தொப்பிப் போடுபவன் என்று சொல்லாமல் சொல்கிறான்

 3. nagoorumi said,

  03/04/2010 இல் 20:43

  dear abedheen, i just listened to the 3gp song from ur media fire url. Excellent one. Thank u and give us many such more songs

  anbudan
  rafee

 4. 04/04/2010 இல் 11:37

  காதர், நன்றி.
  ஜாஃபர் நானா, வீணா கிளப்பாதீங்க – சண்டையை!
  ரஃபி, பக்கா ரிகார்டிங்கில் இது என்னிடம் இருக்கிறது (154 MB). விரைவில் உமக்கு அனுப்புகிறேன்.

 5. 04/04/2010 இல் 16:52

  ஆபிதீன் உண்மை எப்போதும் பாகற்காய்தான்!

 6. 06/04/2010 இல் 01:12

  பாடல் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி!….

 7. nagoorumi said,

  06/04/2010 இல் 04:57

  எப்போ அனுப்புவியும், இன்னக்கி முடியுமா?
  ரஃபி

 8. 06/04/2010 இல் 06:33

  நன்றி ஜெகதீஸ்வரன்.
  ரஃபி, யாராவது ஊர் போனால்தான் கொடுத்தனுப்ப இயலும். ஒரு மாதம் பொறும்!

 9. nagoorumi said,

  06/04/2010 இல் 09:13

  154 mb attach செய்ய முடியாதா?

  ரஃபி

  • 07/04/2010 இல் 06:05

   25 MBக்கு மேல் அட்டாச் செய்ய இயலாதென்று நினைக்கிறேன். ஏதாச்சும் செர்வர்-ல்தான் போடனும். பார்க்கலாம். ஆனால் , ஐந்து MBக்கு மேலே போனால் ஆப்படித்து விடுவான் அரபி! ஏற்கனவே இரு ‘நுழைவுகள்’ புண்ணாகிக் கிடக்கின்றன. தேவையா? கொஞ்சம் பொறுத்தால் சரத்-உன்னி கோப்புடன் ரமேஷ்நாராயணன்-ஸ்ரீவத்ஸன் ஜூகல்பந்தியையும் சேர்த்துக் கொடுப்பேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s