IP: 78.93.230.53 க்கு :
நேற்று கிடைத்த உயிர்மை கட்டுரை படித்துவிட்டு என்னால் தூங்கவே இயலவில்லை. குஜராத் படுகொலை – எட்டாம் ஆண்டு நினைவாக உயிர்மையில் (மார்ச் 2010 , இதழ் 79) வந்த கட்டுரை. ஒரே ஒரு புகைப்படம் – கெ. மோகன்லால் (தமிழில் ஸ்ரீபதி பத்மநாபா). இணையத்தில் கட்டுரை இருப்பதை இப்போதுதான் பார்த்தேன். கொல்லப்படுவதைவிட துயரம் , வாழ்வது…
‘குஜராத் ஒரு பூந்தோட்டத்தைப் போல ரம்மியமானதாயிருந்தது. ஆனால் திடீரென்று எல்லாம் வாடி உதிர்ந்து போனது. இனி ஒருபோதும் அத்தகைய சம்பவங்கள் நிகழக்கூடாது என்றுதான் நான் கடவுளிடம் எப்போதும் பிரார்த்திக்கிறேன். அதிர்ஷ்டவசமாக இங்கே அமைதி திரும்பிக்கொண்டிருக்கிறது, யாரைப் பற்றியும் எதுவும் நான் சொல்லப்போவதில்லை. எனக்கு யாரிடமும் கோபமும் இல்லை. இங்கே எல்லாம் சமாதானமாய்த்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முகத்தை வைத்துக்கொண்டு என்னால் இங்கே வாழ முடியவில்லை என்பது மட்டுமே என் துயரம்’ – குத்புதீன் அன்சாரி
*
ஆர்.எஸ்.எஸ் தலைவரான சுதர்ஸன் எழுப்பிய கேள்விகள். (‘பாஞ்சஜன்யம்’ பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது) :
1. அன்சாரி யாரிடம் கெஞ்சினார்? வன்முறையாளர்களிடமா அல்லது புகைப்படக்காரரிடமா?
2. வன்முறையாளர்கள் என்றால் அவர்கள் யாரும் புகைப்படத்தில் இல்லையே?
3. கர்ப்பிணிகளின் வயிற்றைக் கீறி சிசுவைக் கொன்றார்கள் என்று சொல்லப்படுபவர்கள் எதற்காக அன்சாரியை விட்டார்கள்?
4. வன்முறையாளர்கள் ஏன் புகைப்படக்காரரை தாக்கவில்லை? ஃபிலிமை அழிக்க அவர்கள் ஏன் முயற்சி செய்யவில்லை?
5. அன்சாரி புகைப்படத்துக்கு போஸ்தானே கொடுத்தார்?
அன்சாரியின் பதில்கள் :
1. வீட்டின் பால்கனியில் நின்று , காப்பாற்றுங்கள் என்று அதிரடிப்படையிடம் கெஞ்சினேன்.
2. வன்முறையாளர்கள் கீழே நின்றுகொண்டிருந்தார்கள். அதனால்தான் போட்டோவில் தெரியவில்லை.
3. என் அழுகையைப் பார்த்து வன்முறையாளர்களை அதிரடிப்படை விரட்டியதால்தான் நான் தப்பித்தேன். என்னையும் என் குடும்பத்தையும் அகதிகள் முகாமில் சேர்த்தார்கள்.
4. புகைப்படக்காரர் (Arko Datta) எப்படித் தப்பித்தார் என்று எனக்குத் தெரியாது.
5. நான் புகைப்படக்காரரைப் பார்க்கவேயில்லை.
**
நன்றி : உயிர்மை, கெ.மோகன்லால்,ஸ்ரீபதி பத்மநாபா
மறுமொழியொன்றை இடுங்கள்