ஏனிந்தக் குருவியை இன்னும் காணோம்? – உமா மகேஸ்வரி

‘குருவி’ இந்த வலைப்பக்கத்தில் சீக்கிரம் வந்து அமரும், புதிய கவிதைகள் பாடியபடி!  ஆமாம், உமாவிடம் இப்போதுதான் பேசினேன். பேச்சில் அதே குழந்தைத்தனம் (இன்னக்கி கொஞ்சம் தேவலை! – தாஜ்) . ‘நட்சத்திரங்களின் நடுவே’ தொகுப்பிலிருந்து எங்களின்  பிரியத்திற்குரிய (நாகூர் பாஷையில்: புரியத்துக்குரிய!) உமா மகேஸ்வரியின் எளிய கவிதை ஒன்று.

உமா மகேஸ்வரி
பிரியம் – உமா மகேஸ்வரி

ஏனிந்தக் குருவியை
இன்னும் காணோம்?
எனக்கு மகா செல்லம் அது.
பழுப்புக் கலரில் அழுக்குக் குஞ்சு.
சின்ன இறக்கைகளில்
கறுப்புக்கோடு தெரியும்.
கண் மட்டும்
கண்ணாடிக்கல் மாதிரி
வெளிச்சத் துறுதுறுக்கும்.
உரிமையாய் கூடத்தின்
உள்ளே நுழைந்து நடக்கும்.
புத்தகம் ஒதுக்கி
அதையே கவனிக்கும் என்னை
அலட்சியப்படுத்தும்.
மாடி வெயிலில்
வேட்டியில் காயும்
வடகத்தை அலகால் நெம்புதல்,
தோல் உரிக்காது
நெல்லை விழுங்குதல்,
துணிக்கொடியில் கால் பற்றிக்
காற்று வாங்குதல்,
அறைக்கண்ணாடியில்
தன்னைத் தானே
கொத்திக் கொள்ளுதல் –
அதற்குப் பிடித்தம்.
நான் இறைக்கும்
தானியமணிகளை
அழகு பார்த்துத் தின்னும்
ரசனாவாதி.
ஏனிந்தக் குருவியை
இன்னும் காணோம்?
அது வரும் மாலை
மெதுவாய் நகருதே!
கீழ்வானப் பரப்பில்
கண் விசிறித் தேடினும்
காணவில்லை, எங்கு போச்சோ!
திடுமெனக் காதில்
தித்தித்தது அதன் கீச்சுக்குரல்
ஜன்னல் பிளவில்
உன்னிப் பார்த்தால்
அடுத்த வீட்டு முற்றத்தில்
இறைந்திருக்கும் தானியம் பொறுக்கி
அழகு பார்க்கும் என் குருவி;
என் முகம் ஏறிடாது
திருப்பிக் குனியும் விழிகளை.

***

நன்றி : உமா மகேஸ்வரி, தாஜ், தமிழினி

5 பின்னூட்டங்கள்

 1. 10/03/2010 இல் 12:35

  குருவிக்கி றெக்கை மொளைச்சிருச்சி. பறந்ந்த்து போயிருச்சி 🙂
  உமாவின் கவிதைகள் எனக்கும் பிடிக்கும்.

  • abedheen said,

   13/03/2010 இல் 11:19

   //பறந்ந்த்து போயிருச்சி..// 🙂

   ’குருவி’ வரும் , ஆனா வராது!

 2. Taj said,

  16/03/2010 இல் 06:28

  Varum.
  -Taj

 3. 20/03/2013 இல் 17:14

  என்ன அவதானிப்பு… !

 4. 17/07/2014 இல் 17:03

  வந்துருச்சு…..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s