‘மன்திக்’கும் மார்க்க அறிஞர்களும்

‘கெட்ட அறிஞர்களே மக்களில் கொடியவர்கள்’ – ரசூல் (ஸல்)

*

‘மன்திக்’ என்றால் – அரபிக் கல்லூரிகளில் மார்க்க அறிஞர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிற –  தர்க்க சாஸ்திரக் கலை.  ‘திருக்குர்ஆனின் வசனங்களைத் தெளிவுற விளக்குவதில் செம்மையான தேர்ச்சி பெறாவிட்டால், அதனை மறைப்பதற்காக ‘எனக்குத் தொழுகைக்கு நேரமாகிவிட்டது’ என்று அவசர அவசரமாகக் கூறிவிட்டுத் தனித்துப் போகிறவர்கள்’ என்று சகோதரர் ஹதீப்சாஹிப் கிண்டல் செய்யும் மவுலவிகள் ‘மன்திக்’ பயின்றவர்களாகத்தான் இருக்க வேண்டும். இத்த சொல்ரதுக்கு மன்ஸ் திக் திக்குங்குதுபா..!

‘மக்கள்கள் இருக்குகிறார்கள்’ என்று மரியாதையாக முழங்கும் நம் மார்க்க ‘அறிஞர்களை’ ஒரு பிடி பிடிக்கிறார் ஹதீப் – தனது ‘150 கோடி முஸ்லிம்களின் பார்வையில் இஸ்லாம்’ புத்தகத்தில். அதைப் பார்ப்போம்.  ‘மீலாது நபிக்கு ஒண்ணு போடுங்க’ சொன்ன அன்பருக்காக (இப்படிலாம் அஸ்மா சொல்ல மாட்டேங்கிறாளே..!) போடுகிறேன்.

***

ஏ.ஹெச்.ஹத்தீப் :

‘ஒட்டகம் எப்படி இருக்கும்?’ என்ற கேள்விக்கு ‘உயரமாக இருக்கும்’ என்று யாராவது கூறினால் ‘உயரமாக இருப்பதெல்லாம் ஒட்டகமா? என்று திருப்பிக் கேட்டு மடக்குவார்கள். இதே கேள்வியை அவர்களிடம் கேட்டால் ‘உயரமாக இருக்கும் மிருகங்களில் ஒன்று ‘ என்று சாதுர்யமாகப் பதிலளிப்பார்கள். மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு முதல் பதில் முரணாகவும் மார்க்க அறிஞர்களின் பதில் சரியானதாகவும் படும். உண்மையும் அதுவே.

‘பால் எப்படி இருக்கும்?’ என்பதற்கு வெள்ளையாக இருக்கும் என்பது சரியான பதிலல்ல. பாலின் நிறத்தை மட்டுமின்றி அதன் சுவையையும் இங்கே விளக்கியாக வேண்டும். ஓர் உருவத்திற்கு பன்பொருள் குறியீடுகள் இருக்கையில் அவையனைத்தையும் விளக்கினாலன்றி சரியான வடிவத்தைக் கண்முன்னே கொணர முடியாது. ஆனால் பாமரர்களுக்கு இந்த வித்தைகள் புரியாது.

‘பெருமானார் அவர்கள் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, தெருவில் மறுபக்கம் இருவர் வாய்ச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்’ என்று வைத்துக்கொள்வோம். இந்தச் சம்பவத்தைக் தர்க்க ஞானம் செறிந்த மார்க்க மேதைகள் இப்படி விளக்குவார்கள் : ‘நபிகள் நாயகம் செல்லும்போது இருவர் சண்டையிட்டனர். அதனை நாயகமவர்கள் தடுக்காததால். சண்டையிடுவதை ஆதரித்தார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்!’

இங்கே கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு உண்டு. முதலாவது , ஒருவர் வேகமாகச் செல்லும்போது அக்கம்பக்கத்தில் நடப்பதைப் பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போகும்; அல்லது பாதசாரிகளின் சண்டையை விட  அதிமுக்கியமான ஒருவேலைக்குச் செல்வதாக எடுத்துக் கொள்ளலாம். வாயால் கத்திக் கொள்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட செயல்களில் ஒன்றல்ல; வாய்ச் சண்டையின் இறுதி விளைவு நன்மையாகக் கூட இருக்கலாம். இந்தக் கோணத்தில் சம்பவங்களை ஆராய்வதுதான் அறிவு செறிந்தது. அதாவது,  பெருமானார் வேகமாக நடந்ததும், இருவர் சண்டையிட்டுக் கொண்டதும் தனித்தனி நிகழ்ச்சிகள். ஒன்றோடு ஒன்றைத் தொடர்பு படுத்துதல் எதிர்விளைவுகளை உண்டாக்குவதை நாம் மேலே காண முடிந்தது.

பெருமானார் காலத்தில் நடந்த நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வருகிறது. ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத மூதாட்டி ஒருவர், நபிகள் நாயகம் அவர்கள் மூதாட்டியின் வீட்டின் வழியே செல்லும்போதெல்லாம் மாடியிலிருந்து குப்பையைக் கொட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கூடை கூடையாகக் குப்பைகள் தம்மீது இறைக்கப்படுவததக் கண்டு நபிகட்திலகம் சினமுறவுமில்லை; ஆட்சேபிக்கவுமில்லை. ஆதலால் ‘கண்ணியமிக்க ஒருவர்மீது குப்பைக் கொட்டுவது மார்க்கக் கடமைகளில் ஒன்று’ என்று தீர்ப்பளிப்பது வடிகட்டிய முட்டாள்தனம். ஒருவர் தவறிழைத்து விட்டால் அதனை யாரும் கண்டிக்காத காரணத்தால் அவர் தொடர்ந்து தவறிழைப்பதற்கான அனுமதியைப் பெற்றுவிட்டதாகவோ அவனது தவறு அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவோ வாதிடுவது சமூகத் துரோகம் மட்டுமின்றி சட்டவிரோதமுமாகும்.

இத்தகைய மார்க்க அறிஞர்களுக்குத் திருமுறை வசனங்களையும் மாநபிக் கருத்துக்களையும் திரித்துக் கூறுவது கை வந்த கலை. மார்க்க ஞானிகளின் அறிவாற்றல் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட இஸ்லாமிய சமுதாயம், இறைக்கருத்துக்கும் நபிமொழிக்கும் சரியான மொழியாக்கம் தரப்படுகிறதா என்று ஆராய்வதில்லை. ஆதலால் முரண்பாடுகள் மலிந்து கொண்டிருக்கின்றன.’

*

நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப் | E- Mail : hatheeb@gmail.com

A. H. Hatheeb Sahib
16, Mohideen Palli Street, Nagore – 611002
Tel : 0365 250218, Mob : 9944884080

2 பின்னூட்டங்கள்

 1. துரை said,

  27/02/2010 இல் 17:42

  நபிகள் நாயகம் அவர்கள் செய்தார்கள் நாமும் அதனை செய்யவேண்டு என்று சொல்பவர்களுக்கு சரியான விளக்கம்..இதைப்பற்றி இன்னும் நிறைய எழுது..

  அன்புடன்

  துரை

 2. Jaffar Sadiq said,

  24/01/2011 இல் 09:45

  insya allah


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s