தெய்வமய்யா இந்த தெய்வநாயகம்!

சித்த மருத்துவர் தெய்வநாயகம் (செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனை, எழும்பூர்) பங்குபெறும் நிகழ்ச்சியிலிருந்து :

*

மருத்துவர் தெய்வநாயகம்ஐயா,  +1 படிக்கிறப்போ டெஸ்ட் பண்ணுனேன் தைராய்ட் இருக்கு – நீர்க்கட்டியா இருக்குன்னு சொன்னாங்க. இடையிலே கவனிப்பு இல்லாம விட்டுட்டேன் அப்படியே. அது இப்ப ரொம்ப கூடிக்கிட்டே போவுது –  உடம்பும் பெருத்துகிட்டே போவுது. என்ன செய்றதுங்க?

அம்மா.. உங்க உடல் எடை கூடுவதற்கு காரணம் உங்க வாய்!

வாயா?!

ஆமா. நீங்க உங்க வாயை கட்டுப்படுத்தாம ஒரு மருந்…தும் வேலை செய்யாது. நீங்க என்ன செய்யனும்னா இப்ப நீங்க சாப்புடுற அளவுல பாதிக்கு உங்களை பழக்கப்படுத்திக்கனும். முதல்லெ பாலை விட்டுடனும். தயிரை விட்டுடனும். மாமிசம் விட்டுடனும். சோறுல செம்பாதி – முடிந்த வரையில் புழுங்கல், கைக்குத்தல். இது மிகச் சிறந்த உணவு. நிறைய தானியங்களை பயன்படுத்தனும். கீரைகளை பயன்படுத்தனும். காய்கறிகளை பயன்படுத்தனும். கனிகளையும் பயன்படுத்தலாம். அவைகளையெல்லாம் சேர்த்துக்கொண்டு.. இனிப்பையே சேர்க்கக்கூடாது. கிழங்கை குறைச்சிடனும். காலை மாலை சூரியஒளி படனும். நல்ல காற்று படனும். நடையைக் கூட்டனும். மடமடன்னு ஒரு வாரத்துக்கு அரைகிலோ அல்லது முக்கால் கிலோ குறையனும். பத்துமாதத்துலெ நீங்க உங்க பழைய நிலைக்கு மிக எளிதாகச் சென்றுவிடலாம்.

2.

ஐயா, எனக்கு தைராய்டு டெஸ்ட் எடுத்தாங்க…

என்னம்மா இது.. யாரைப்பார்த்தாலும்  தைராய்டு பண்ணுனீங்க, சைனஸ் பண்ணுனீங்கன்னு.. என்ன இது? உங்க உடம்புலெ என்ன மாற்றம்ண்டு முதல்லெ சொல்லுங்க.

எனக்கு ஏஜ் இருவத்தொண்ணு

என்ன மாற்றம்டு சொல்லுங்கண்டேன்

அதாவது.. பீரியட்ஸ் வந்து அதிகாகும்..அதுக்கு டெஸ்ட் எடுத்தோம். 21. 6ண்டாங்க.. டேப்லெட்ஸ் எத்தனை வருஷம் எடுத்துக்கனும்?

இப்ப நீங்க என்ன செய்யனும்னா – உங்களுக்கு தைராய்டு சுரப்பு குறைவா இருக்குன்னு சோதனையிலெ சொல்லியிருக்காங்க,  அதைவிட அடிப்படையிலெ நீங்க கவனிக்க வேண்டியது – உங்களுக்கு உடலில் உற்சாகம் , மனதில் உற்சாகம் , சுறுசுறுப்பு குறைஞ்சிருக்குதான்னு கவனிக்கனும். அதெல்லாம் நீங்க கவனிக்காம , ஏதோ சோதனை பண்ணிட்டா மருந்து கிடைச்சிடும்டு நெனைச்சா என்னம்மா அர்த்தம்?  ரொம்ப தப்பு இல்லே இது? நீங்க கவனிச்சி, உங்க அம்மாட்ட பேசி, அப்பாட்ட பேசி , திருமணம் ஆயிருந்தா கணவர்ட்டெ பேசி , என்ன கவனிச்சீங்க, சுறுசுறுப்பு குறைஞ்சிருக்கா, அடிக்கடி கோவம் வருதே என்? இப்படிலாம் கவனிச்சிங்கன்னா இந்த சுறுசுறுப்புத் தன்மை இயல்பு நிலைக்கு வந்து – தொடர்ந்து இயல்பு நிலையிலெ இருக்கும்போது – இந்த தைராய்டு மாத்திரையை நீங்க குறைக்க முடியும். சரி, எத்தனை நாட்களாகும்? இந்த நவீன மருத்துவம் செய்யிறவங்க சொல்லுறதெல்லாம் நீங்க வாழ்நாள் முழுவதும் சாப்பிடவேண்டியிருக்கும்டு! சித்தமருத்துவத்துக்கு போனீங்கன்னா உங்களை ஆளைப்பார்த்து, நாடியைப் பாத்து, உடம்புலெ உள்ள எல்லா நாடிகளையும் சீர்படுத்தி, அது சீராய்ப்போயிடுச்சின்னா நிறுத்திடுங்கன்னு சொல்லிடுவாங்க. விருந்தும் மருந்தும் மூணு நாளுன்னு ஏன் சொல்லுறாங்க? சிறு நாட்களிலேயே இதை குறைத்துவிடலாம். ஆனால் நீங்க எச்சரிக்கையா பார்த்து உடலில் மனதில் சுறுசுறுப்பு வந்தவுடன் இந்த அளவைக் குறைச்சிடுங்க. அதன் பிறகு சித்த மருத்துவரைப்போய் பாருங்க. அவர் என்ன சொல்றாருன்னு பாருங்க. அவர் சொன்னபிறகு – அச்சமே இல்லாம – (மாத்திரைகளை) நிறுத்திடலாம். எப்ப பார்த்தாலும் தொடர்ந்து சோதனை பண்ணுறது – அந்த சோதனையிலே 20லேர்ந்து 15ஆச்சி. 15லேர்ந்து 13ச்சான்னு.. அது ஏதோ ஒரு கடவுள் சொன்ன மாதிரி நெனைச்சிக்கிட்டிருக்க வேண்டிய அவசியமே கிடையாது. நாம் நம் உடம்புடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் கலந்து , நம்மைப்பற்றி அவர்கள் என்ன கணிக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டால் இந்த குழப்பம் வராது.

3.

ஐயா, சிறுநீர் கழிக்கும்போது.. எரிச்சலா ஜலம் வருது. அதுக்கு என்ன ஐயா பண்ணுறது?

தம்பி…எரிச்சலுக்கு என்ன காரணம்டு சொன்னா உங்க..

யூரின்லெ ‘பஸ்’ இருக்குங்குறாங்க..

கொஞ்சம் இருங்க. ஒவ்வொன்னா சொல்லிட்டு இருக்காதீங்க. உங்களுக்கு எரிச்சல் இருக்கு, அதுவல்லாமல் சிறுநீரில் வெள்ளணுக்கள் இருக்குண்டு சொல்றாங்க? அவ்வளவுதானே?

இல்லே இல்லே, வெல்…

ஓ.. உங்களுக்கு தமிழே தகராறா இருக்கு! சொல்றேன் கேளுங்க. வெள்ளணுக்களுக்கு ஆங்கிலப்பெயர் WHITE CELLS. அந்த WHITE CELLS -ஐத்தான் அவங்க ‘PUS CELLS’ங்குறாங்க. இப்ப வெளங்கிடிச்சா? மறக்கவே மறக்காதீங்க. இந்த வெள்ளணுக்களுக்கு என்ன காரணம்னா உங்க உடம்பில் ஏதோ ஒரு கிருமித் தாக்கம் இருக்கிறது. அந்த கிருமித் தாக்கம் வந்து உங்களுடைய சிறுநீர்ப்பையிலெ இருந்தாலும் இருக்கலாம். சிறுநீரகத்திலெ இருந்தாலும் இருக்கலாம். அதனுடைய தாரைகளில் இருக்கலாம். அல்லது சிறுநீர்ப்பையின் கீழே ஒரு சதைப்பகுதி இருக்கு. ஆங்கிலத்துலெ PROSTATE -ண்டு பெயர். அந்த சதைப்பகுதிலே கூட இந்த கிருமித் தாக்கம் இருக்கலாம். இது இருந்ததுன்னா அது நீங்குவதற்கு மருந்துகள் கொடுப்பாங்க. அதேமாதிரி தமிழ் மருந்துகள் நிறைய மருந்துகள் இருக்கு. அதை உங்க ஊர் சித்த மருத்துவர்ட்டெ கேட்டீங்கன்னா அவர் கொடுப்பாரு. சில மருந்துகள் பெயர் சொல்றேன். தெரிஞ்சிகொள்ளுங்க. நண்டுக்கல் பற்பம், சிலாசத்து…என்று பல மருந்துகள் இருக்கு. அவைகளை பயன்படுத்தினால் ஒரு இரண்டு மூன்று வாரங்களில் இந்த சிறுநீர்க் கடுப்பு எரிச்சல் முழுமையாக மறைந்துவிடும்.

4.

மன அழுத்தம் சம்பந்தமாக ஒருவருக்கு :

மனப்பதட்டம் ஏற்படுகிறது, மன அழுத்தம் ஏற்படுகிறது, மனம் இறுக்கமாக இருக்கிறது, நாம் மனதை தளர்த்திக்கொண்டு – மனைவியோ மக்களோ – யாருடனும் பேச முடியவில்லை என்ற நிலைக்கு கொண்டுவந்தீங்கன்னா அதற்கு தனியாக வேறு மருந்தே வேண்டாம். உங்களுடைய குடும்பத்தில் இதைப்பற்றித் தெளிவாகப் பேசி – ஏன் இப்படி மனதை அலைய விடுறீங்க? பதட்டப்பட விடுறீங்க? உங்க மனதில் என்ன இருக்கிறது? நீங்க என்ன செய்ய விரும்புறீங்க? என்ன செய்ய முடியலே என்கிற குழப்பம் வருகிறது? இந்த முரண்களை நீங்கள் உங்கள் வீட்டில் – உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான அங்கத்தினரிடம் பேசி இதை வெகுவாக குறைத்துக்கொள்ளலாம். வாரம் தோறும் தலைக்குளியல் (எண்ணெய்), நாள்தோறும் தலையில் நீர்விட்டு – குளிர்ந்த நீரில் மட்டுமே குளிக்க வேண்டும். ஒருபோதும் நீங்கள் வெந்நீரில் குளிக்கக்கூடாது. வெயில்படுற மாதிரி நடக்கனும். நன்றாக நடந்து பழகனும். முடிஞ்சதுன்னா பிரணாயாமம் என்கிற வழிநிலைப்பயிற்சி எடுத்துக்கொள்ளுங்க. உடல் எடையை குறைச்சிடுங்க. சோகையை குறைப்பதற்காக கீரைகள், காய்கறிகள் , எள்ளு அல்லது எள்ளு சேர்ந்து எள்ளுருண்டை அதையெல்லாம் சாப்பிட்டுப் பழகுங்க. அப்ப நீங்க சொல்லக்கூடிய மன அழுத்தம் , மன இறுக்கம்லாம் தன்னாலெ குறைஞ்சிடும்.

**

படித்துவிட்டீர்களா என் இனிய தமிழ் மக்களே? மக்கள் தொலைக்காட்சியில் வரும் மருத்துவர் தெய்வநாயகத்தை தெய்வம் என்று நான் புகழ்வதற்கு இதெல்லாம் ஒரு காரணமே அல்ல. மோர் மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் பருகலாம் என்று சொல்லிவிட்டு, பால் ஒரு வெள்ளை நஞ்சு என்று ஐயா அவர்கள் சொல்வதையெல்லாம் அப்புறம் நாம் பார்க்கலாம். சொல்லவருவதே வேறு. சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி தன் கணவரின் பரிதாப நிலையை – ‘அவரு எப்பவும் வானத்தையே பாத்துக்கிட்டு பேந்த பேந்த முழிச்சிக்கிட்டிருக்காரு, உளறி உளறி பேசுறாரு, தடுமாத்தமா நடக்குறாரு, திடீர் திடீர்ண்டு சிரிக்கிறாருங்க’ (அச்சாக நான் ஊரில் செய்வதுபோலவே இருந்தது!) என்று  – விலாவாரியாக எடுத்துரைத்தபோது தெய்வநாயகம் ‘பட்’டென்று சொன்னார்:

‘கணவருக்கு மரியாதை கொடுக்க ஆரம்பிச்சிங்கன்னா தன்னால அதெல்லாம் குறைஞ்சிடும்!’

**

நன்றி : மருத்துவர் தெய்வநாயகம், மக்கள் தொலைக்காட்சி.

7 பின்னூட்டங்கள்

 1. cheeta said,

  11/04/2011 இல் 23:43

  i want doctor .mobile number.r email id.pls sed me

  • abedheen said,

   12/04/2011 இல் 09:37

   மன்னிக்கவும், என்னிடம் இல்லை. மக்கள் தொலைக்காட்சியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் தெய்வநாயகம் ஐயாவின் நிகழ்ச்சி முன்பு இருந்தது. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த நிகழ்ச்சியின் இறுதியில் முகவரியும் மற்ற விபரங்களும் தருவார்கள். பாருங்கள். சிரமமாக இருந்தால் நீங்கள் மக்கள் தொ.கா அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்கலாம்.
   இணைய முகவரி : http://makkal.tv/contactus

   நன்றி.

  • senthil said,

   21/01/2014 இல் 12:12

   Old No. 50/ New No. 32, Montieth Road, Egmore, Chennai, Tamil Nadu, 600008, Montieth Rd, Egmore, Chennai, Tamil Nadu 600008

 2. ஹமீது said,

  07/05/2011 இல் 14:33

  சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி தன் கணவரின் பரிதாப நிலையை – ‘அவரு எப்பவும் வானத்தையே பாத்துக்கிட்டு பேந்த பேந்த முழிச்சிக்கிட்டிருக்காரு, உளறி உளறி பேசுறாரு, தடுமாத்தமா நடக்குறாரு, திடீர் திடீர்ண்டு சிரிக்கிறாருங்க’ (அச்சாக நான் ஊரில் செய்வதுபோலவே இருந்தது!) என்று – விலாவாரியாக எடுத்துரைத்தபோது தெய்வநாயகம் ‘பட்’டென்று சொன்னார்:

  ‘கணவருக்கு மரியாதை கொடுக்க ஆரம்பிச்சிங்கன்னா தன்னால அதெல்லாம் குறைஞ்சிடும்!’

  கடைசியில் திரு. தெய்வ நாயகம் அய்யா சொன்னது தெய்வ வாக்கு.

 3. chandera said,

  23/11/2012 இல் 08:05

  I am 48 years old. I am experiance for past 5 years that feas feeling like head pounding, body shaking, diffuclt for breathing as if there is some movements at nose. Doctor telling that I am going thru anxitety problems and taking fresiam medicine. But even I take medicince, meditation, and exercise still the problem not solved. My head is heavy and its swings all the time. My period is regular but only 3 days also little. Pls adivsise how to overcome this problems.

 4. Dr.R.BalamuruganBSMS said,

  15/04/2015 இல் 10:57

  Service to mankind is service to god.Best wishes.

 5. 03/07/2019 இல் 09:05

  Dr Deivanayagam Speech about siddha


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s