நாகூர் ரூமியின் ‘நுழைவுகள்’

‘உற்சாகப்படுத்துகிறது உபுண்டு  , மயக்குகிறது மாண்ட்ரிவா ‘ என்ற தலைப்பில் கம்ப்யூட்டர் சம்பந்தமான பதிவு ஒன்றை  – லினக்ஸ் தெரியாமலேயே – எழுதிக் கொண்டிருந்த எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்திவிட்டார்கள் சில நண்பர்கள். மறக்க நினைக்கிற , மறந்தே ஆகவேண்டிய பழைய கசப்புகள்… அனைவரின் பிழைகளையும் இறைவன் மன்னிப்பானாக, ஆமீன்.

மனதை மாற்றும் மருந்து நகைச்சுவைதான். நகைச்சுவை என்றால் நாகூர் ரூமிதான். (இப்படி எழுதினால்தான் பதிலுக்கு அவர் என்னைச் சொல்வார். சொறி!).  ரூமியின் பிரதான ‘நுழைவாசல்’ இங்கே இருக்கிறது – தூயவன் மாமாவின் முத்திரைக் கதையுடன். இந்தப் பதிவு , பிரிய நண்பரின் வேறு ‘நுழைவுகள்’ பற்றி..

நாகூர் ரூமி‘இலக்கியச் சுடர்’ விருது பெற்ற இவருக்கு ‘நகைச்சுவைச் சுடர்’ பட்டத்தை யாராவது வழங்குங்களேன். நான் வழங்க நட்பு இடிக்கிறது. விஷயம் ஒன்றுமில்லை.. ரூமி சார் ஏதோ ஒரு வேர்ட்பிரஸ் பக்கத்தில் நுழைந்திருக்கிறார் (அது அவருடையதாகவும் இருக்கலாம்). நமது கண்ணுக்குத் தட்டுப்படாத ‘அந்த’ விஷயம் அவருக்கு மட்டுமே புலப்பட்டிருக்கிறது. இதற்குத்தான் நுண்மான் ‘நுழை’புலம் வேண்டும் என்பது. என்ன விஷயம்? ‘லாகின்’ செய்வதற்கு ‘புகு பதிகை’ என்று பூதமாய் தமிழ்படுத்தும் வேர்ட்பிரஸ் விஷயம்தான். அதாவது.. பதிவுகளின் கீழே தெரிகிற (இதெல்லாம் கீழேதான் தெரியும்) ‘முந்தைய நுழைவுகள்’ பிந்தைய நுழைவுகள்’ விஷயம். இது அவருக்கு மாபெரும் ‘எழுச்சி’யை ஏற்படுத்தி விட்டதாம்…

இந்த ஆன்மிகம் பேசுபவர்கள் அபாயகரமானவர்கள்.

சில வேர்ட்பிரஸ் தளங்களில் ‘முந்தைய வரவுகள்’ ‘பிந்தையை வரவுகள்’ என்றோ ‘முந்தைய இடுகைகள்’ ‘பிந்தைய இடுகைகள்’ என்றோ இருக்கிறது. ‘புது இடுகை’ என்பதே எழுத கிளர்ச்சியான வார்த்தையாக இருந்தாலும் இதெல்லாம் ‘Theme’ஐப் பொறுத்த தீமைகள். பதிவர்கள் என்ன செய்வார்கள்? ‘ஓய்.. இந்த வார்த்தைகள் நல்லா இருக்குதுங்கனி’ என்று சொல்லிவிட்டு , ‘நுழைவுடன், ரூமி’ என்று வேறு மெயிலை முடித்திருந்தார்‍ ‍- புதுசா கல்யாணமானவன் ‘புழையுடன்’ என்று முடித்த மாதிரி! (கல்யாணத்தை கூட ‘நுழைவுத் தேர்வு’ என்று குறிப்பிடலாம் என்று இப்போது தோன்றுகிறது.) ஒரு பழைய குமுதம் ஜோக் :  புதிதாய் கல்யாணம் செய்தவள் அவள் தோழிக்கு எழுதிய சின்ன கடிதம். ‘என் கணவர் எப்போது பார்த்தாலும் செக்ஸ் செக்ஸ் என்று – ஒரு நிமிடம் கூட விடாமல் – என்னை பிழிந்தெடுக்கிறார். என்னால் தாங்கவே முடியவில்லைடி… PS: எழுத்து கிறுக்கலாக இருப்பதற்கு மன்னிக்கவும். ‘ஜெர்க்’ அதிகமாக இருக்கிறது!’.

சரி, எனது வேர்ட்பிரஸ் பக்கங்களிலுள்ள நண்பன் ரூமி சம்பந்தமான ‘நுழைவுகளை’ தொகுத்து கீழே தந்திருக்கிறேன். நீங்கள் எதிலே வேண்டுமானாலும் நுழைந்து, கண்குளிர பாருங்கள்.  இணையத்தில் எங்கும் கிடைக்காத – ரூமி மொழிபெயர்த்த – ஃப்ராய்டின் ‍’கனவுகளின் விளக்கம்’   எனது கூகிள்பக்கங்களில் இருக்கிறது. அஃதை இங்கே மாற்ற நாளாகும் என்பதாலும் தனது சேவையை வேறொரு முகவரிக்கு மாற்றப் போவதாக கூகிள் தொடர்ந்து பயமுறுத்துவதாலும் இதைச் சொல்ல நேர்ந்தது.  ‘கிழக்கு’ வெளுக்குமுன் காப்பி செய்துகொள்ளுங்கள்.

 நிறைய வேலை இருக்கிறது. அரபி கூப்பிடுகிறான். அல்லாவே, எதில் நுழைக்கப் போகிறானோ தெரியவில்லையே…

**

‘நுழைவுகள்’ :

1. நாகூர் ரூமி பற்றி :

2. சித்தி ஜூனைதா பற்றி நாகூர் ரூமி (ஆச்சிமா ஒரு அறிமுகம்)

3. குங்குமத்தில் நாகூர் ரூமி (தீவிர வாதம் பற்றி )

4. மஸ்னவி கதைகள் – ஜலாலுத்தீன் ரூமி

5. இசையும் இறைவனும்

6 ‘இறையருட் கவிமணி’ கா. அப்துல் கபூர் பற்றி

7. உஷாவின் நாவலுக்கு முன்னுரை

8. மயானம் ஒரு அறிமுகம்

9. நாகூர் ரூமியின் பாட்பூரி – ‘நாகூரி’

8 பின்னூட்டங்கள்

 1. sureshkannan said,

  03/02/2010 இல் 09:36

  //மறக்க நினைக்கிற , மறந்தே ஆகவேண்டிய பழைய கசப்புகள்//

  😦

  //(கல்யாணத்தை கூட ‘நுழைவுத் தேர்வு’ என்று குறிப்பிடலாம் என்று இப்போது தோன்றுகிறது.)//

  🙂

 2. Abdul Qaiyum said,

  04/02/2010 இல் 08:08

  அன்பு ஆபீதின், தங்கள் பதிவை ரசித்தேன். ‘வோர்ட் பிரஸ்’ தமிழ்ப்படுத்தி வைத்திருப்பது நல்ல முயற்சி. சிற்சமயம் வார்த்தைகள் புரிவது கடினமாக இருக்கிறது. கலைச்சொற்கள் ஆளாளுக்கு ஒருமாதிரி வைத்திருக்கிறார்கள். எல்லோரும் ஒன்றிணைந்து ஒருமுகமாக வைத்தால் நம்மைப் போன்ற பதிவாளர்களுக்கு நல்லது.

  வருங்காலத்தில் நாகூர்க்காரர்கள் “Service Provider” ஆனால் கலைச்சொற்களை இங்ஙனம் கையாள்வார்காளோ?

  Enter = ஜியாரத்து
  Home = அலங்கார வாசல்
  Back = முதுபக்கு
  Alert Virus = கபர்தார்
  Please comment = உண்டிமே நியாஸ் டாலோ
  Microsoft = பறாட்டா உருண்டை
  View = பராக்கு
  Header = தலைமாட்டு வாசல்
  Footer = கால்மாட்டு வாசல்
  Text Box = தர்கா முற்றம்
  Paint = சாந்து
  Drop Cap = தொங்கு சங்கிலி
  Delete = முடி இறக்குதல்

  • 04/02/2010 இல் 08:19

   கையும், உங்களுக்கு நூறு ஆக்ஸிடெண்ட்டானாலும் நகைச்சுவைக்கு மட்டும் சேதம் ஏற்படாது. சரி, Microsoft = ‘பறாட்டா உருண்டை’ என்றால் நான் இப்போது உருட்டும் லினக்ஸ் என்ன? ‘ஹாஜாகேக்’கா?

 3. nagoorumi said,

  04/02/2010 இல் 08:58

  ஆஹா ஆபிதீன், எத்தனை நுழைவுகள்! எனது ஒரு ’நுழைவை’ வைத்து ’புகுந்து’ விளையாடி விட்டீரே! நுண் மான் நுழை புலம் யாருக்கு? உமக்கா எனக்கா? எனக்கு ‘முனைவர்’ பட்டம் கிடைத்த மாதிரி உமக்கு ‘நுழைவர்’ பட்டத்தை நானே மனமுவந்து, முகம் சிவந்து வழங்கி விடுகிறேன்! ரொம்ப சிரித்தேன், ரொம்ப ரசித்தேன். உமது நகைச்சுவைக்குள் ‘நுழைந்து’ பார்த்தது ஒரு சுகமான அனுபவம்!

  கய்யூமின் லிஸ்ட் அருமை!

  ’முனைவர்’ நாகூர் ரூமி

  • 04/02/2010 இல் 17:32

   ரஃபி, ‘நுழைவர்’ பட்டம் எனக்கு வேண்டாம். ஆதம் (அலை) ஏற்கனவே வாங்கி விட்டார்கள்!

 4. 04/02/2010 இல் 16:41

  நானா,

  மலரினும் மெல்லிது, கற்காலம், புரிந்து கொள்வதும் அறிந்து கொள்வதும் – இதெல்லாம் கிடைக்குமா?

 5. 04/02/2010 இல் 16:48

  கய்யூம் காக்கா,
  அப்போ,

  Start – பாம்பரம் ஏத்துறது

  shut down- கொடி இறக்குறது

 6. Abdul Qaiyum said,

  09/02/2010 இல் 16:22

  வாவ் சூப்பர் இஸ்மாயில்.

  என் எண்ணத்தில் மோதிய மேலும் சில கலைச்சொற்கள் :

  Click = ஒத்தை
  Double Click = டபுள்
  CD-ROM = வாடா
  Hard Disk = சீனி வாடா
  Floppy Disk = லாப்பை
  Folder = முர்தபா
  Paste = அல்வா
  Window = மாடாக்குழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s