கவிஞர் தாஜ் மகளுக்கு கல்யாணம்

புத்தாண்டின் முதல்பதிவு நல்லவிஷயமாக இருக்கட்டுமே! நண்பர் தாஜின் இளைய மகள் நிலோஃபருக்கு என் வாழ்த்துக்கள். பதிவிடும் திருமணப் பத்திரிக்கை பக்கா சீர்காழி ஸ்டைல். நாகூர் என்றால் கண்டிப்பாக ஷாஹூல் ஹமீது பாதுஷாவும் ஆசி வழங்கியிருப்பார்கள்! எப்படியோ இந்த கல்யாண முழி, சாரி, மொழி நன்றாகத்தான் இருக்கு! மணமக்களை வாசகர்கள் வாழ்த்த வேண்டுகிறேன்.

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் – (அல் குர்ஆன் 2:187) . இந்த ஆடை குறித்து சகோதரர் இப்னு ஹம்துன் எழுதிய பதிவை இங்கே வாசிக்கலாம். நன்றி.

**

நிக்காஹ் (எனும்) திருமண அழைப்பிதழ்

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ‘துஆ’ பரக்கத்தாலும் நிகழும் சங்கையான ஹிஜ்ரி 1430-ஆம் ஆண்டு மொஹரம் பிறை 16-ல் ஜனவரி மாதம் (3.1.2010) ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.30க்கு மேல் 12.00க்குள் , முபாரக்கான நல்ல வேளையில் , சீர்காழி சிதம்பரம் மெயின்ரோடு, (மர்ஹூம்) S. அப்துல்லா – மும்தாஜ் அம்மா அவர்களின் பேத்தி, S.A. தாஜூதீன் – ரஹ்மத்துன்னிசா அவர்களின் புதல்வி T. நிலோஃபர் நிஷா D.BTEC, HNC, B.Sc. Vis.Com.,) மணாளியை திருநெல்வேலி மேலைப்பாளையம் (மர்ஹும்) S.A. கலீல் ரஹ்மான் அவர்களின் புதல்வர் K. சேக் முகம்மது B.Sc (HM & CS) மணாளருக்கு இன்ஷா அல்லா திருமணம் (நிக்காஹ்) செய்வதாய் பெரியோர்களால் நிச்சயித்தவண்ணம் இம்மண விழா திருநெல்வேலி பாளையங்கோட்டை முருகன்குறிச்சி செல்வி மஹாலில் நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து மணமக்களின் நல்வாழ்விற்கு ‘துஆ’ செய்யுமாறும், உடன் நடைபெறும் விருந்து உபசரிப்பில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறும் அன்புடன் அழைக்கிறோம்.

தங்கள் அன்புள்ள
P. M. முகம்மது சாலி – ராபியத்துபீவி
S.A. தாஜூதீன் B.A., – ரஹ்மத்துன்னிசா
A. ஜியாவுதீன் – நஜ்முன்னிசா
T. அஜ்மல்தீன் B.Tecc. MCSA (Camp : Saudi)
சிதம்பரம் மெயின்ரோடு, சீர்காழி
Cell (Taj) : 9894445205

2 பின்னூட்டங்கள்

 1. Manivannan said,

  03/01/2010 இல் 11:03

  ”HAPPY MARRIED LIFE ” Heartly wishes from Manivannan

 2. Taj said,

  04/01/2010 இல் 06:17

  Thanks Mani.
  -Taj


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s