இன்று வந்த எஸ்.எம்.எஸ்

ஆஃப்கானுக்கு அதிகம் படைகள் அனுப்பும் அதிபர் ஒபாமா பற்றி ஆவேசப்படுகிறார்கள் ஒருபுறம். கோபன்ஹேகன் கோமாளித்தனங்களில் சூடாகி கொந்தளிக்கிறார்கள் மறுபுறம் (‘Deal is a Betrayal’ என்கிறது ‘7Days’). இவருக்கு மட்டும் இறைவனின் பெயர் பற்றிய கவலை! எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார். வேறு யார்? நம்ம ஜபருல்லா நானாதான். அதைப் பதிவிடும் முன் ‘பைக்காரா‘ புகழ் கய்யும் இந்த ‘பை’த்தியத்திற்கு அனுப்பிய கேள்வியை சொல்லி விடுகிறேன். ‘எழுத்தை Hobby-யாக வைத்திருக்கும் உங்களை Hobby-deen என்று அழைத்தால் என்ன?’  எழுத்து எனக்கு ஹாபியா?  ஹப்பி (அரதப்பழசு) தீனென்று அழைக்காதவரை மகிழ்ச்சிங்க. இந்த நாகூர் எழுத்தாளர்கள்…!

இன்று வந்த எஸ்.எம்.எஸ்

இறைவா!
நீ படைத்த மனிதர்களுக்கு
உன் பெயரைத்தான் வைக்கிறோம்
‘அல்லாஹ்’ என்று
உனக்கு பெயர் சூட்டியது
யார்?

– இஜட்.

5 பின்னூட்டங்கள்

 1. 20/12/2009 இல் 09:52

  வாப்பாட வாப்பா பில் வாப்பா மாதிரி அல்லாட அல்லா பில் அல்லா எல்லாம் கிடையாது

  இருந்தாலும் இஜட் நானாவின் கவலை நியாயமான கவலை

  பைக்காரா பத்தி படித்தேன் – எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்..! ‘பைஜாமா’ ங்கிறாங்களே.. அப்படின்னா என்னா..? பைநிறைய ஜாமானா..?

 2. ஹமீதுஜாஃபர் said,

  20/12/2009 இல் 16:27

  ஜஃபருல்லா நானாவுக்கு வித்தியாசமான எண்ணங்கள் இப்படியெல்லாம் வரும். சிந்தித்தால் குழப்பம் மிஞ்சும். ஆகவே சிந்தித்துக் குழும்புவதைவிட சிந்திக்காமல் தெளிவாயிருப்பதே மேல்.

  அடுத்து, ‘பில் அல்லா’ சுமார் ஐம்பது வருடங்களுக்குமுன் கேட்கப்பட்டு விடையும் அளிக்கப்படுவிட்டது. கேட்டவர் சாட்ச்சாத் அதே ஜஃபருல்லாதான். விடை அளித்தவர் மாமேதை மௌலவி அப்துல் வஹ்ஹாப் ஹஜ்ரத் அவர்கள்.

 3. nagoori said,

  21/12/2009 இல் 11:15

  சுனாமி சமயத்திலே நம்ம ஊருக்கு வந்தாரே கிளிண்டன்; அவரோட வாப்பாவோட வாப்பாவை எப்படி கூப்பிடுறதுன்னு எனக்கு இப்போ புரிஞ்சுப் போச்சு.

  பில் கிளிண்டன். கரெக்ட்டா?

 4. 21/12/2009 இல் 11:55

  வாப்பா ஊர் வந்திருந்த சமயம். சொந்தங்களைப்பார்க்க அறந்தாங்கி, ஏம்பல், ஒக்கூர் போன சமயத்தில் பட்டுக்கோட்டையில் இறங்கி ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். பில் வந்தது. அதை எடுத்த என் தம்பி சேத்தாப்பா , ‘பில் வாப்பா’ என்று என் வாப்பாவிடம் கொடுத்தான். அதுதான் ஞாபகம் வருகிறது. ‘பில்வாப்பா’வின் நிஜமான அர்த்தம்தான் தெரியவில்லை.

  ‘பில் அல்லா’? ஜாஃபர்நானாதான் விளக்க வேண்டும்.

  • ஹமீதுஜாஃபர் said,

   21/12/2009 இல் 15:24

   பில் அல்லா விளக்குவதானால் ஒரு கட்டுரை எழுதவேண்டும் அவ்வளவு சங்கதி இருக்கிறது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s