புலவர் ஆபிதீன் தந்த பொன்மொழிகள்

‘பொன்மொழிகள் எழுதிப்படிக்க அல்ல ; எழுதியதைக் கடைப்பிடித்தால்தான் அவை பொன் மொழிகள்!’ என்றே ஒரு பொன்மொழியைப் பார்த்தேன்! இன்றொரு பொன்மொழியென்று ஒரு வலைப்பக்கமும் இருக்கிறது. இது 1949-இல் வெளியான புலவர் ஆபிதீன் காக்காவின் ‘தேன்கூடு’ நூலிலிருந்து. ஆபிதீன் காக்கா தேர்ந்தெடுத்த பொன்மொழிகளுடன் அவருடைய சொந்த பொன்மொழிகளும் இந்த நூலில் உண்டு.  எனக்கு மிகவும் பிடித்தது ஈஸா அலைஹிவஸ்ஸலாம் (இயேசு நபி) சொன்னதுதான்!

*

உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று; இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக் களிப்பே – ஹென்றி போர்டு

நீரிலேயே வாழ்ந்தாலும் மீனின் உடல் நாற்றம் போவதில்லை! – கபீர்தாஸ்

தூய்மையை நாடும் போராட்டத்தில் அழியினும் அழிக; ஆயிரம் முறையும் மரணத்திற்கு நல்வரவு கூறுக; தளர்வுறாதே. நல்லமுதம் பெறற்கரிதாயினும் நஞ்சுண்ணக் காரணம் உண்டா? – விவேகானந்தர்

மாடும் முரடு; ஓட்டுகிறவனும் வெறியனானால் வண்டிக்குத்தான் வினாசகாலம். – டாஸ்மானியப் பழமொழி

குளிர் மிகுதிதான்; கந்தல் உடைதான்; ஆனாலும் என் ஒழுக்கம் எனக்கு உஷ்ணம் தரும் – ட்ரைடன்

எண்ணங்களுக்குத் தக்கபடியே காரியங்களும் தீர்மாணிக்கப்படும். – முஹம்மது நபி (ஸல்)

இவ்வுலகும் இதிலுள்ள வஸ்துக்களும் விலையுயர்ந்தவைகளே; ஆனால், இங்குள்ள எல்லா வஸ்துக்களிலும் விலையுயர்ந்தாயிருப்பது குணசாலியான ஒரு பதிவிரதையே. – முஹம்மது நபி (ஸல்)

காதல் அற்புதங்களைச் செய்கிறது; ஆனால், பணம்தான் கலியாணத்தைச் செய்கிறது! – டாஸ்மானியப் பழமொழி

பதிவிரதைக்கு முழத் துணி கிடைப்பதில்லை; தாசிக்கோ, பெனாரஸ் புடவை! – கபீர் தாஸ்

தியாகியின் இரத்தத்தைவிட, எழுத்தாளனின் மை மேலானது. – முஹம்மது நபி (ஸல்)

மேலோர் நிலைமை கொஞ்சம் அபாயகரமானதுதான். ஏனெனில், நாம் அவர்களுக்கு சமானமாய் இல்லையே என்ற கோபத்தால், அவர்களிடம் என்ன குறை காணலாம் என்று நாம் சதா தேடிக்கொண்டே இருக்கிறோம் – கதே

நாம் உண்மை என்று நம்புவதை ஒப்புக்கொள்ள மறுப்பவரை நாஸ்திகர் என்பது தவறு. இழிவான நோக்கங்களைக் கொண்டு உண்மைக்குச் செவிசாய்க்க மறுப்பவரே நாஸ்திகர். சமயக் கோட்பாடுகளை எல்லாம் நம்புவதாய் கூறிக்கொண்டு சமய ஒழுக்கத்துடன் இல்லாதவன் நாஸ்திகரில் நாஸ்திகன். – ஹெச்.எ.

தேக் பலத்தில் உன்னை ஒருவன் வெல்லலாம். ஆனால், ஒப்புரவு அறிந்துச் செய்தல், அடக்கம், பொறுமை, சினங்காத்தல் இவற்றில் தோல்வி அடையாதே. – அரேலியர்

உன்னுடைய வாழ்க்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ , அப்படியேதான் உழைப்பும். உழைப்பின்றி ஜீவிப்பதில் உற்சாகமில்லை. – ஹாலி

உன்னுடைய நடத்தையே உனக்குச் சன்மானத்தையும், தண்டனையையும் அஃததற்குக் ஏற்றவண்ணமாகக் கொண்டுவந்து கொடுக்கும் – முஹம்மது நபி (ஸல்)

பெண் கடவுளின் ஓர் ஒளிக் கதிர்; கேவலம் மனைவி மட்டுமல்ல; அவள் கர்த்தாவின் ஆத்மா! வெறும் ஜீவ ஜந்து மட்டுமல்ல. – ஜலாலுத்தீன் ரூமி

எது நமக்கு உகந்ததோ அதை உடனே கைக்கொள்ள வேண்டும். இல்லையேல் கைக்கு வந்ததுதான் உன் மனதிற்கு உகந்ததென்று எண்ணும்படிச் செய்துவிடுவர். காற்றோட்டமில்லாத இடத்தில் இருந்து நல்ல காற்றே கெடுதல் என்று எண்ணத் தோன்றிவிடுகிறது. சமய உணர்ச்சி இல்லாத இடத்தில் நாஸ்திகமே சிறந்ததாகிவிடுகிறது. அறிவு இல்லாத இடத்தில் அறியாமையே வேதமாகிவிடுகிறது. – பெர்னார்ட் ஷா

அபூர்வ சக்தியுள்ளவர்களை பகிரங்கப்படுத்துவது வறுமை. செல்வம் அவர்களை மூடிவிடுகிறது. – ஹோரஸ்

பசி, குளிர், கஷ்டம் இவற்றால் புலவன் சாகிறான்; அழிவுகளினூடே அறிவிலி தங்கத்தைக் காண்கிறான். – ஸாஅதி

பண விஷயமாய் நம்பத் துணியாத இடத்தில் ஆன்ம விஷயமாய் நம்பத் துணிவது எவ்வளவு விபரீதம்! மதாச்சாரியார் காலணா கொடுத்தால், அது செல்லுமோ செல்லாதோ என்று சந்தேகிப்போம்; ஆனால் அவர் கூறும் மத விஷயத்தை ஆராயாது அப்படியே அங்கீகரித்து விடுகிறோம். என்னே மனிதர் மடமை! – பென்

தன் சக்திகளிலிருந்து சாத்தியமான அளவு சாறு பிழிவதே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை இலட்சியமாய் இருத்தல் அவசியம் – ரிக்டர்

நாளைய தினத்திற்காக இன்றே கவலைப்பட வேண்டாம். அந்தந்த நாளுக்கு அதனதன் கவலை போதாதா! – ஈசா நபி (அலை)

புலவர் ஆபிதீனின் பொன்மொழிகள் :

விதி என்பது தோல்வி; அதிர்ஷ்டம் என்பது வெற்றி

மனிதனுக்கு ஆயுள் மட்டும் சொற்பமன்று; அறிவும் அப்படியே. ஆகவேதான் முற்ற அறிந்த யாருமே இல்லை.

உலகத்தில் எல்லாவற்றிற்கும் அவசியமானது எது என்றால், அது அளவு ஒன்றுதான்.

8 பின்னூட்டங்கள்

 1. ஜெயக்குமார் said,

  15/12/2009 இல் 12:38

  ”புலவர்” ஆபிதீனின் கருத்துக்களை ஆங்காங்கே இடைச்செருகியதன் மூலம் படிப்போருக்கு தாங்கள் கூற வரும் கருத்து யாது?

  ஜெயக்குமார்

 2. ஹமீதுஜாஃபர் said,

  15/12/2009 இல் 15:58

  “சோம்பல் வறுமைக்குத் தாய் தகப்பன்” – இதை என் மொழியாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

 3. 16/12/2009 இல் 06:17

  ஜெயக்குமார், ஒரு கருத்துமில்லை. ‘தேன்கூடு’ நூலிலுள்ள எல்லா பொன்மொழிகளையும் பதிவிட நினைத்தேன். அவ்வளவுதான். நல்ல செய்திகளை யாரும் சொல்லலாம் என்ற கருத்து இப்போது தோன்றுகிறது – ஜாஃபர்நானாவின் பொன்மொழியைப் பார்த்த பிறகு.
  நன்றி.

  • abedheen said,

   16/12/2009 இல் 06:48

   ஜெயக்குமார், குழப்பம் தவிர்க்க புலவரின் பொன்மொழிகளை தனியாக இப்போது தந்திருக்கிறேன்.

 4. ஜெயக்குமார் said,

  20/12/2009 இல் 14:04

  நீங்க புலவர் ஆபிதீன் அப்படினு சொல்றது உங்களைத்தானே??

 5. ஜெயக்குமார் said,

  20/12/2009 இல் 14:05

  //சோம்பல் வறுமைக்குத் தாய் தகப்பன்” – இதை என் மொழியாக சேர்த்துக்கொள்ளுங்கள்//

  நெடுநீர், மறவி, மடிதுயில் இவைநாண்கும்
  கெடுநீரார் காமக் கலன்.
  -வள்ளுவன்

 6. 21/12/2009 இல் 06:03

  //புலவர் ஆபிதீன் அப்படினு சொல்றது உங்களைத்தானே??//

  இல்லை ஜெயக்குமார். அவ்வளவு புத்திசாலியல்ல நான். ‘புலவர் ஆபிதீன்’ என்பவர் வேறு. அவரைப்பற்றி மேலும் அறிய கீழுள்ள சுட்டியைச் சொடுக்குங்கள். நன்றி.
  https://abedheen.wordpress.com/2007/07/28/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%af%8d/

 7. ஜெயக்குமார் said,

  21/12/2009 இல் 13:27

  படித்தேன்.. வறுமை தின்ற புலவன் என்ற பெயரில் வந்த கட்டுரையில் இவரைப் பற்றி படித்த ஞாபகம்.

  ஜெயக்குமார்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s