புரவலர் புரட்டுகள் – இ.த.இ. கிசுகிசு

நேற்று எனக்கு வந்த மின்னஞ்சலில் ஒரு பெரிய நோட்டிஸ் இணைக்கப்பட்டிருந்தது. நோட்டிஸ் வெளியிட்ட ‘சத்திய நேசர்கள் (சென்னை)’  பிரபல தமிழ் சூஃபிக் கவிஞரின் தீவிர விசிறிகள் போலும். ஒரு புரவலரை கிழிகிழியென்று கிழித்திருந்தார்கள். அதைப் பார்த்த என் நண்பர் ஒருவர், ‘கிசுகிசு’ என்பதுதான் உண்மை’ என்கிறார்! உண்மையா? அப்படியென்றால் நான் நிஜமாகவே அறிவாளி என்றல்லவா ஆகிவிடும்! நம்பாதீங்க சார். சரி, நோட்டீஸின் முக்கிய பகுதியை மட்டும் – பெயரைக் குறிப்பிடாமல் – சும்மா பதிந்து வைக்கிறேன். எல்லாப் புரவலர்களின் அரிப்பும் தெரிந்ததுதானே… அரசுக்கு நெருக்கமாக இருக்கிற கலைஞர்களை மட்டும் காக்கா பிடித்து ‘காரியம்’ சாதிக்கும் , ‘காரியம்’ முடிந்த பிறகு ஏறி மிதிக்கும், காக்காக்கள். ஆனால் , ஒரு புரவலரைத் தாக்குவது வேறொரு புரவலருக்கு ‘வால்’ பிடிப்பதற்கல்லவா? என்னை விடுங்கப்பா… இலக்கிய மாநாடுகள் நடக்கும், சத்தியம் அழிந்தே தீரும்!

***

நோட்டீஸிலிருந்து :

….

‘அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாவது மாநாட்டில் ஓரிரு இலட்சம் ரூபாய் கொள்ளையடித்ததாகக் கூறி பேராசிரியர் ஒருவரைப் பழிவாங்கிய, இந்தப் பகல்வேட வள்ளல், ‘அந்த ஆறாவது மாநாட்டிலேயே ஆறரை இலட்சம் ரூபாய் சுருட்டிக் கொண்டார்’ என்ற தகவல் ஏழாவது மாநாட்டின் போது வெளியே தெரிய வந்தது… பத்து ஆண்டுகளுக்கு முன் பெரும் புலவர் பேராசிரியர் XXXX  அவர்கள் இஸ்லாமிய இலக்கிய கழகத்திற்காக வழங்கிய ரூபாய் ஒரு இலட்சம் வங்கியில் இட்டு வைப்பு செய்யப்பட்டது. அந்தப் பணத்தை ஏழாவது மாநாட்டுக்குப் பிறகு பகல்வேட வள்ளலிடம் கேட்கப்பட்டபோது , அந்த அசல் இலட்சத்தை மட்டும் இலக்கிய கழகத்துக்கு வழங்கி, எஞ்சிய வட்டித் தொகை சுமார் இரண்டரை இலட்சத்தை ஏப்பம் விட்டவர்தான் இந்த வள்ளல்.

‘சத்தியம் வந்துவிட்டது. அசத்தியம் அழிந்து விட்டது, நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்!’ – திருக்குர்ஆன் (17-81)

1 பின்னூட்டம்

 1. 17/11/2009 இல் 15:33

  ஆறாவது மாநாடு

  ஓரிரு இலட்சம் ரூபாய்

  ஆறாவது மாநாடு

  ஆறரை இலட்சம் ரூபாய்

  ஏழாவது மாநாடு

  பத்து ஆண்டுகள்

  ஒரு இலட்சம்

  ஏழாவது மாநாடு

  இரண்டரை லட்சம்…

  என்னா இது…

  ஏழரை

  ஆரம்பிச்சிடுச்சா…?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s