அன்பிற்கினிய ஆபிதீன் அண்ணன் அவர்கட்கு …
ஜாபர் முஹ்யித்தீன் மாமாவைப் பற்றி மிக முக்கியச் செய்திகளையும் பதிவு செய்ய வேண்டுகிறேன். நான் 80-களில் சிங்கையில் இருந்தபோது எனது தகப்பனாரின் இனிய நண்பர் என்ற முறையில் அவர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்று இருந்தேன்.
சிங்கப்பூரில் தமிழ் முரசு பத்திரிக்கையில் அவர்களுடைய கட்டுரை, இலக்கியப் படைப்புகள் வாரந்தோறும் வரும். நம்மூர் ஜனாப் L.S.M. தாஹா மாமா அப்பத்திரிக்கையில் பணி புரிந்துள்ளார்கள்.
மேலும் நாகூரில் இன்று அதிகமாக இஸ்லாமியப் பெண்கள் இளங்கலை, முதுகலை என பட்டங்கள் பெறுகிறார்கள். இதில் ஜாபர் மொஹைதீன் மாமாவின் பங்கு மிக முக்கியமானது. நாகூரில் கிரசண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி துவங்க மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் மாமா. ஒவ்வொரு வீடாகச் சென்று “நான் தகப்பன்போல் உங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன், வயதுக்கு வந்த பிள்ளைகளாக இருந்தாலும் தயக்கம் வேண்டாம்” என்று கெஞ்சிக் அழைத்துச் சென்று இந்த அளவுக்கு பட்டதாரிகள் முஸ்லிம் பெண்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தவர்கள்.
கீழக்கரையில் நடைபெற்ற 5-வது இஸ்லாமிய உலகத்தமிழ் மாநாட்டு நிர்வாகிகளில் ஒருவராக இருந்து சிறப்பாக செயல்பட்டு அந்த மாநாடு சிறக்க பாடுபட்டவர்கள் என்பதையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
அன்புடன்
S.கபீர் அஹ்மது / பஹ்ரைன்
***
சுட்டிகள் :
‘சொல்லரசு’ மு. ஜாஃபர் முஹ்யித்தீன்
நாகூர் தந்த நற்றமிழ் புலவர்கள் – ஜாஃபர் முஹ்யித்தீன்
இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கிய முதல் மாநாடு (15-16 பிப்ரவரி 1992 புதுக்கோட்டை) சிறப்பு மலரிலிருந்து
சித்தி ஜூனைதா பேகம் ஒரு நேர்காணல் – சொல்லரசு, மு.ஜாபர் முஹ்யித்தீன் (முஸ்லிம் முரசு ( பொன்விழா மலர் / 1999 )
Abdul Qaiyum said,
08/11/2009 இல் 20:21
பள்ளிக்கூடத்தில் பணியாற்றிய நாகூரின் நடமாடும் பல்கலைக் கழகம் இவர்.இந்த தகவல் களஞ்சியத்தை ஒன்றிரண்டு முறை புரட்டிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. செய்திகளை முந்தித் தருவது தினத்தந்தி என்பார்கள். இந்த ஏடு முந்தைய செய்திகளை சுவை குன்றாது அள்ளித் தரும்.
இந்த கம்ப்யூட்டரை இன்னொரு முறை Browse செய்து Winzip செய்ய நினைத்தேன். அதற்குள் shutdown ஆகிவிட்டது.
அவரது ஆன்மாவை நல்லடியார் கூட்டத்தில் upload செய்ய எல்லா வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.
ஆபிதீன் said,
09/11/2009 இல் 06:11
Upload செய்துவிட்டேன்!
அன்பு கய்யும், பல பேராசிரியர்களின் ஆய்வுக் கட்டுரைகளுக்கும் நூல்களுக்கும் உதவியர்கள் நம் ஜாஃபர் மாமா. நத்தர்ஷா , செ.மு,மு. அலி போன்றவர்கள் மாமாவைப் பற்றி எழுதியிருந்தால் உங்கள் பக்கத்தில் அவசியம் பதியுங்கள். நண்பன் ரூமி தன்னுடைய ‘சூஃபிஸம்’ புத்தகத்தை ஜாஃபர்மாமாவுக்கு சமர்ப்பணம் செய்திருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த விசயம்.