என் மனைவி – புலவர் ஆபிதீன்

இன்று ‘அஸ்மா’வின் பிறந்தநாள். கையில் கிடைத்தது கண்ணீர் வரவழைக்கும் இந்தப் பாட்டுதான்.

***

என் மனைவி – புலவர் ஆபிதீன்

எண்ணற்ற ஆசையுடன்
எடுத்துஅடி வைத்துவிட்டாய்
மண்ணற்ற உலகமதில்
மறைவாக வாழ்வதற்கோ!

பல்லாண்டு ஒத்துழைத்தாய்
பட்டினியாய்ப் பரவசமாய்ச்
சொல்லாமல் பிரசவத்தால்
சோர்ந்துவுடல் சாய்ந்துவிட்டாய்!

முதுமைதான் வருமுன்னே
மூச்சையே நிறுத்திவிட்டாய்
புதுமைசேர் உன்கணவன்
புலம்பிட நீ போய்விட்டாய்!

புண்பட்டு அழுவேனெனப்
புரியாமல் அவசரமாய்க்
கண்களையும் மூடிக்கை
கால்களையும் நீட்டிவிட்டாய்!

முதுகையும் தடவிவிட்டு
முடிகோதும் நீயின்றி
எதுகைமோ னையுடனே
எவ்வாறு பாட்டிசைப்பேன்!

நல்லதின் பண்டங்களை
நாதனுக்கு ஊட்டிவிட்டுச்
சில்லென்று நீர்குடித்துச்
சிந்தைதான் மகிழ்பவளே!

பிள்ளையைப் பேணச்சொல்லிப்
பிரியாவிடை பெற்றவளே
வெள்ளையுளம் நினைந்துருகி
வேதனையில் திரிகின்றேன்!

கொள்ளியையுங் கண்டஞ்சும்
கோழைத்தனம் உள்ளவளே
பள்ளியிலே வந்திருந்தாய்
பயமின்றித் தொழும்போது!

எந்தைதாய் மரணித்தார்
என்கண்ணில் நீரில்லை
அந்தோபார் அழுகின்றேன்
அறிவாயோ கண்ணீரை?

எப்படி நீ தூங்குகிறாய்
என்னைவிட்டுப் புதைகுழியில்
தப்படியும் அகலாமல்
தாவியணை ஆருயிரே!

சற்றேனும் பிரிந்திருக்கச்
சகியாத என்தோழி
அற்றாயே பற்றெல்லாம்
ஆண்டவனே துணையுனக்கு!

– புலவர் ஆபிதீன்
‘அழகின் முன் அறிவு’ நூலிலிருந்து..

நன்றி : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

2 பின்னூட்டங்கள்

 1. M.ABDUL KHADER said,

  18/10/2009 இல் 13:22

  Dear Abidheen,

  Arumaiyana pattai eduthu ezhithi iruntheergal. Ithu mathiri niraya eduthu ezhthungal. Ungal pani sirakka en vazhthukkal. Neenda nalachu ungalai parthu. Londonil neengal iruntha pothu eduthukkonda photo parthen alagu. Ippa engirukkireergal. Ini eppa ungalai parpeno theriyalai ya allah.

  Anbudan
  Nagore M.A.KHADER,
  Dammam, KSA

 2. 19/10/2009 இல் 06:05

  அன்பு காதர்,

  தமிழில் எழுதுங்க சார்! உங்களுக்கு இன்று தனிமடல் அனுப்பியிருக்கிறேன். நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s