‘ரமலான் பிறக்கட்டும் , மனங்கள் திறக்கட்டும், அன்பு பெருகட்டும், அகிலமே மகிழட்டும்’ என்ற குறுஞ்செய்தியோடு ஜபருல்லா நானா முந்தாநாள் அனுப்பிய கவிதை (அ) இன்னொரு செய்தி. இந்த மனிதரிடமிருந்து ‘கவிதைகளை’ வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது!.
ஒரு மனிதனின் கதை
இஜட். ஜபருல்லா
நீரால் உருவாகி
இருட்டிலிருந்து
காற்றால் உயிரேந்தி
வெளிச்சத்தில் விழுந்து
இருட்டுக்கும் ஒளிக்கும் நடுவே
உறங்கி விழித்து
இறுதியில் மரித்து
மண்ணில் புதைந்து
நடுவில்
கொஞ்சம் வாழ்க்கை!
**
நன்றி : இஜட். ஜபருல்லா
மறுமொழியொன்றை இடுங்கள்