புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2008 இதழிலிருந்து, நன்றிகளுடன்.
ஆங்கிலம் வழி தமிழில் : புதூர் இராசவேல்
*
மூன்றாவது வழிபாட்டுப் பாடல் – மஹ்மூத் தர்வீஷ்
எனது சொற்கள்
மண்ணாய் மணத்த நாளில்
கோதுமைத் தாள்களின்
நண்பனாயிருந்தேன்.
எனது சொற்கள்
கொதித்துச் சீறிய நாளில்
இரும்புத் தளைகளின்
நண்பனாயிருந்தேன்.
எனது சொற்கள்
கற்களாய் உறைந்த நாளில்
தழுவிச் செல்லும் ஓடையின்
நண்பனாயிருந்தேன்.
எனது சொற்கள்
கலகமாய்க் கிளர்ந்த நாளில்
நடுங்கும் நிலத்தின்
நண்பனாயிருந்தேன்.
எனது சொற்கள்
புளித்த ஆப்பிளாய் சுருங்கிய நாளில்
நம்பிக்கை தளரா உள்ளங்களின்
நண்பனாயிருந்தேன்.
ஆனால்
சொற்கள் தேனாய்ச் சுரந்த தருணத்தில்…
ஈக்கள் மொய்த்தன
என் உதடுகளில்!
**
pudhuveli said,
29/04/2012 இல் 07:54
எங்கள் விழிகளை தோண்டினாலும்
கனவுகளை கலைக்க முடியாது.
யூதர்களின் தோட்டாக்கள்
இதயங்களை துளைக்கலாம்
எங்கள் ஈமானை
என்ன செய்யும்…-? -ஈ.எல்.எம்.இர்ஷாத் (மீராவோடை)
ஆபிதீன் said,
12/07/2014 இல் 11:12
பலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வேஷ் கவிதைகள்…
காலப் பொருத்தம் கருதி….! – +ashroff shihabdeen