எழுத ஒரு கடலே இருக்கிறது…

haja_ali02b

ஹாஜா அலி: நினைவுகளும் பதிவுகளும் – 1

இதனால்
தமிழ்ப் பூக்களின்
சகலவிதமான
வாசகர்களுக்கும் அறிவிப்பது…..
என்னவென்றால்,
திணிக்கப்படுவதில்லை இலக்கியம்;
தேடப்படுவது.

கந்தர்வ காலம் முதற்கொண்டு
இக் கலி வரை ஓய்ச்சலின்றி
தேடல் சாஸ்வதமாக்கப்பட்டுவிட்டதால்…
வண்டுகள் தேன் தேடுகின்றன.
வாலிபம் துணை தேடுகிறது.
“நீ எதைத் தேடுகிறாய்…
அதைக் கண்டெடுக்கப்படுவாய்…”
என்று நீதி உரைக்கிறது.

இங்கே
என் உயிரில் நெருடும்
தமிழ் தேடினேன்…
இதனால்
தமிழ்ப் பூக்களின்
சகலவிதமான
வாசகர்களுக்கும் அறிவிப்பது….
ஹாஜா அலி

பிப்ரவரி 1982 – ல் வெளிவந்த தமிழ்ப் பூக்கள்/ 6ல் ஹாஜா அலி இப்படி ஓர் அறிவிப்பை செய்திருந்தார். அதே இதழில் சிறுகதை குறித்த ஓர் அபிப்ராயத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து கீழே படிக்கயிருக்கின்றீர்கள்.  தமிழ்ப் பூக்களின் இரண்டாவது இதழிலும்/ ஏழாவது இதழிலும் ‘முகங்கள்’ என்கிற தலைப்பின் கீழ் இரண்டு கட்டுரை  எழுதி  இருந்தார். அந்தக் கட்டுரைகளை… வரும் நாட்களில் வாசிக்கலாம். – தாஜ்

சிறு கதை?

கவிதை ஆபரணம் என்றால்
சிறு கதை ஈட்டி மாதிரி.
படிப்பவர் மனசை
குத்திக் கிழிக்கிற ஆயுதம்.
சரியாக எழுதப்பட்ட சிறுகதையைப்
படிக்கிற வாசகர்களில்
எவனாவது ஒருத்தன்
அதில் தன்னையே கண்டு கொள்கிறான்.
நறுக்குத் தெறித்தாற்போல்
வந்து விழுகிற வார்த்தைகளில்
வாசகனை மடக்கிப் போடுகிற
ஆசிரியனின் வெற்றி இருக்கிறது.
இதுவரை தமிழில்
லட்சத்தி சொச்சம் பேர்
சிறு கதை எழுதிவிட்டார்கள்!
இனியும் எழுதுவார்கள்.
இவர்களில் எவரை எவரையெல்லாம்
சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் என்பது?
சரியான மண்டை சுத்துக் கேள்விதான்.
ஆஹா ஓஹோ என்ற ஜெயகாந்தனும்
இன்று அடங்கிக் கிடக்கிறார்.
இன்றைய மைனர்களுக்காக எழுதும்
சுஜாதாவின் எழுத்துகூட
வாசகனை 100டிகிரிக்கும் மேல்
ஜுரம் கொள்ளச் செய்வதோடு சரி.
வெளிப்பகட்டில் மின்னுகிற
எத்தனையோ எழுத்தாளர்களும்
எழுத ஒரு துளிகூட இல்லாமல்தான்
கதை மாதிரி பாவலா
செய்து காட்டுகிறார்கள்.
ஊர்பேர் தெரியாமல் ஒதுங்கிக்கிடக்கிற
சிலருக்கோவெனில்
எழுத ஒரு கடலே இருக்கிறது.
ஹாஜா அலி

***  

தொகுத்தளிப்பும் தட்டச்சும்…
தாஜ் / தமிழ்ப்பூக்கள்
E- Mail :  satajdeen@gmail.com

1 பின்னூட்டம்

 1. தாஜ் said,

  13/07/2009 இல் 17:33

  ஹாஜா அலியை
  ஆபிதீன்
  பக்கங்களில் வாசிக்கிறபோது
  புதியதோர் நெருடல்….
  தினுசாய் அறுக்கிறது மனதை!
  – தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s