ஸகீக்-உல்-பல்கியின் கண் திறக்கிறது…

அசதிமிக்க ஆன்மீகக் குஞ்சான எனக்கு ஒரு அறை விட்டார் அகார் முஹம்மது மவுலவி (இலங்கை). ‘இஸ்லாத்தில் உழைப்பும் பொருளாதாரமும்’ என்ற தலைப்பில் அவர் பேசியதைக் கொஞ்சம் உழைத்துப் பதிகிறேன். அழாமல் இனி போவேன் அலுவலகம்; அரபி அறைந்தால் அவனிடமும் இதைச் சொல்வேன். எனக்கென்னமோ என் அஸ்மாதான் அப்படி அகார் முஹம்மது மவுலவியை பேசவைத்தாள் என்று படுகிறது !

**

‘அந்தப் பறவை.. அந்தக் குகைக்குள் சென்றது. குகை இருளாக இருந்தது. சற்று நேரத்தில் அந்தப் பறவை வெளியே வந்தது. வந்தபோது, அதன் சொண்டிலிருந்த, வாயிலிருந்த இரையைக் காணவில்லை. அது மீண்டும் போய்விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் அதே பறவை… மீண்டும் சற்று உணவை எடுத்துக்கொண்டு வந்தது; உள்ளே சென்றது; மீண்டும் திரும்பிப் போனது. இவ்வாறு மூன்று நான்கு தடவைகள் இந்த நிகழ்வு நடந்தது. நான் உள்ளேபோய் சற்று கூர்ந்து பார்த்தபோது அந்த இருண்ட குகைக்குள்ளே ஒரு குருவிக்கூடு! அந்தக் கூட்டிலே ஒரு பறவை. அந்தப் பறவைக்கு கண்பார்வை இருக்கவில்லை. பறக்கக்கூடிய நிலையிலும் இருக்கவில்லை. ஒரு முடமான, குருடான பறவையாக இருந்தது. அந்தப் பறவைக்குத்தான் இந்தப் பறவை – இவ்வாறு ஒருநாளைக்கு பலமுறை – இரைகொண்டு வந்து கொடுத்ததை நான் கவனித்தேன். சுபுஹானல்லாஹ்! இந்தக் காட்டிலே,  உயிரினங்களுக்குத் தேவையான எந்த வாழ்வாதாரம் இந்த இடத்திலே, இந்தக் குகையிலே, இந்த இருளுக்குள் , இந்தக் கூட்டில் வாழ்கிற, இந்த முடமான, குருடான, பறவைக்கே… ரிஜ்கு (உணவு) கொடுக்கக்கூடிய அல்லாஹ் எனக்கும் தரமாட்டானா?  ஏன் நான் உணவுக்காக உழைப்புக்காக இவ்வளவு சிரமப்படவேண்டும்? என்று சிந்தித்து , எனது முடிவை மாற்றி நான் ஊர் திரும்பி விட்டேன் என்று (ஸகீக்-உல்-பல்கி) சொன்னார்கள். (உஸ்தாத்) இப்ராஹிம்-பின்-அத்ஹம் ரஹ்மத்துலாஹ் அவர்கள் (தன் சீடரான) ஸகீக்-உல்-பல்கியைப் பார்த்து , ‘ஸகீக்-அல்-பல்கியே.. உமது பார்வை வித்யாஸமானதொரு பார்வை. வினோதமான ஒரு பார்வை! நான் இதை எப்படிப் பார்க்கிறேன் தெரியுமா , ஸகீக்கே..? முடமான, குருடான, பிறர் தயவில் வாழுகின்ற அந்தப் பறவையாக இருக்காமல், தனக்கும் உணவு தேடி, மற்றொரு ஜீவனுக்கும் உணவு தேடி, தானும் வாழ்ந்து இன்னொரு ஜீவனையும் வாழவைக்கிற அடுத்த பறவையை ஏன் நீர் பார்க்கவில்லை? ஏன் அந்தப் பறவையாக நீர் இருக்கக் கூடாது?’ என்று கேட்டபோது ஸகீக்-உல்-பல்கியின் கண் திறக்கிறது…’

**

நன்றி : அகார் முஹம்மது மவுலவி, தமிழன் டி.வி., முபாரக் நானா (லண்டன்).

**
ஒரு சுட்டி : Ibrahim Bin Adham – Wikipedia, the free encyclopedia

3 பின்னூட்டங்கள்

 1. ஜெயக்குமார் said,

  02/07/2009 இல் 09:44

  நன்றாக இருந்தது கதையும், நீதி போதனையும்…

  • abedheen said,

   04/07/2009 இல் 06:34

   ஜெயக்குமார், உங்களுக்குத் தெரிந்திருக்கும், ‘ரிஜ்க்’ என்றால் வெறும் உணவு மட்டுமல்ல. இறைவன் கொடுத்த எல்லா கொடைகளும் ‘ரிஜ்க்’தான். ‘ரிஜ்க்’ பற்றி விலாவாரியாக விளக்கிய எங்கள் கம்பெனி PRO (மிஸிரி), ‘ உடை ஒரு ‘ரிஜ்க்’, வேலை ஒரு ‘ரிஜ்க்’ , பிள்ளைகள் ஒரு ‘ரிஜ்க்’ , மனைவி ஒரு ‘ரிஜ்க்’ என்று சொல்லிக்கொண்டே போனான். ‘மனைவியா? அது ‘RISK’ அல்லவா ?!’ என்று நான் கேட்டதும் சந்தோஷத்தில் அப்படியே என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டுவிட்டான்!

 2. S.S.Mubarak, London said,

  19/08/2009 இல் 22:54

  Salams Br.Abideen
  How r u
  Long time no contact. Would like to hear from u. When u planning to come to London.
  Insha Allah keep in touch

  Mubarak


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s