நாகூர் ரூமி

 nagore_rumi_wiki.jpg 

நாகூர் ரூமி – விக்கிபீடியா | நாகூர் ரூமியின் இணையத்தளம்

 

AHA FM’ Speech |  நாகூர் ரூமி பற்றி ‘தென்றல்’ இணைய இதழ்

“குஜராத்தில் படுகொலைகள் இன்றும் தொடர்கின்றன…”
மனித உரிமைப் போராளி தீஸ்தா செட்டில்வாட் சிறப்புரை – தமிழாக்கம் : நாகூர் ரூமி

நாகூர் ரூமியின் ‘சூஃபித்துவம் ‘ நூல் பற்றி பா.ராகவன்  |

ஹரன் பிரசன்னா  | நாகூர் ருமி

 நாகூர் ரூமி பேட்டி – அதிகாலை. காம்

இழப்பு என்னவோ ராமருக்குத்தான்… ! – ஆசிஃப்மீரான்

 
 
 

 

 மோடியின் வெற்றி : ஜனநாயகத்துக்கான எச்சரிக்கை! இந்திய ஜனநாயகத்தை நோக்கிய துர்க்குறிகள் –  ராம் புன்யானி
 தமிழில் : நாகூர் ரூமி

View Nagore Rum’s Latest Articles from Tamiloviyam | Nagore Rumi’s Blog (old)

Nagore Rumi Photos

இயற்பெயர்: ஏ.எஸ்.முஹம்மது ர·பி
புனைபெயர்: நாகூர் ரூமி
பரம்பரை: வண்ணக் களஞ்சியப் புலவரின் பரம்பரையில் வருபவர் நாகூர் ரூமி.
இவரது பெரியம்மா சித்தி ஜுனைதா பேகம்தான் தமிழின் முதல் முஸ்லிம் பெண் நாவலாசிரியர். டாக்டர் உவேசா முன்னுரை வழங்கிய இவரது முதல் நாவல் காதலா கடமையா? 1938-ல் வெளி வந்தது. செண்பகவல்லி தேவி, மகிழம்பூ போன்ற நாவல்களையும், பல சிறுகதைகளையும், கட்டுரைகளையும் இவர் எழுதினார். இவரது கட்டுரைத் தொகுப்பு இஸ்லாமும் பெண்களும் என்ற தலைப்பில் நாகூர் ரூமியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. காதலா கடமையா நாவல் சென்னை ஸ்நேகா வெளியீடாக சமீபத்தில் மறுபதிப்பு கண்டது.இவரின் தாய்மாமா தூயவன் (அக்பர்) ஆனந்த விகடனில் பல முத்திரைக் கதைகள் எழுதி புகழ்பெற்று, பின்னாளில் பிரபலமான திரைப்பட வசனகர்த்தாவாகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார். வைதேகி காத்திருந்தாள், அன்புள்ள ரஜினி காந்த், உள்ளம் கவர் கள்வன் போன்றவை இவரது சொந்தத் தயாரிப்பில் உருவான சில படங்கள்.இவரின் இன்னொரு தாய்மாமா நாகூர் சலீம் பிரபலமான பாடலாசிரியர். சமீபத்தில் தமிழக அரசால் கலைமாமணி பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டவர். 3000-க்கும் மேலான பக்திப் பாடல்களை எழுதியவர். நாகூர் ஹனீபா, ஷேக் முஹம்மது போன்ற பிரபலமான பாடகர்கள் பாடிய பெரும்பாலான பாடல்கள் இவருடையவையே.கல்வித்தகுதி: எம்.ஏ (ஆங்கில இலக்கியம்), பி.எச்.டி.(கம்பனிலும் மில்ட்டனிலும் ஒப்பாய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றது)
தொழில்: ஆங்கிலப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
பணி அனுபவம்: கடந்த 21 ண்டுகளாக ஆங்கிலத்துறைப் பேராசிரியர்.
ஊர்: நாகூர், தஞ்சை மாவட்டம் (தற்போதைய நாகை மாவட்டம்)
தாய்மொழி: தமிழ்
எழுத்துப்பணி: 1980-களில் தொடங்கியது. மணிச்சுடர், கணையாழி, மீட்சி போன்ற சிறுபத்திரிக்கைகளிலும், குமுதம், ஆனந்தவிகடன் போன்ற வணிக இதழ்களிலும், திண்ணை, தமிழோவியம், திசைகள் போன்ற இணைய இதழ்களிலும் கதை, கவிதை, கட்டுரை, தமிழாக்கம் என பல வடிவங்களிலும் எழுதி வருகிறார்.

 


மின்னஞ்சல்: ruminagore@gmail.com

இணையதள முகவரி: http://nagoorumi.wordpress.com

 தொலைபேசி: செல்: 99947-67681

1. நதியின் கால்கள் (கவிதைத் தொகுப்பு) ஸ்நேகா வெளியீடு, சென்னை முதல் பதிப்பு மார்ச் 2000.

2. குட்டியாப்பா (சிறுகதைத் தொகுப்பு) ஸ்நேகா வெளியீடு, சென்னை முதல் பதிப்பு மார்ச் 2001.இந்த நூலின் மீதான எம்.·பில் பட்ட ஆய்வு, ·பாத்திமா என்பவரால் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சமர்ப்பிக்கப்பட்டு அவருக்கு பட்டமும் வழங்கப்பட்டது.கேரளப் பல்கலைக் கழக மாணவி சு.முத்துலட்சுமி என்பவரால் “நாகூர் ரூமியின் குட்டியாப்பா சிறுகதைத்தொகுப்பு ஒரு ஆய்வு” என்ற தலைப்பில் திருவனந்தபுரம் பல்கலைக் கழகக் கல்லூரித் தமிழ்த்துறை வாயிலாக கேரள பல்கலைக் கழகத்துக்கு ஆய்வுக்கட்டுரை 2004ல் சமர்க்கிப்பட்டது.இந்த நூல் கேரள பல்கலைக் கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.நேஷனல் புக்ட்ரஸ்ட் இந்தியா-வின் சிறுகதைத்தொகுப்பில் “குட்டியாப்பா” கதை சேர்க்கப்பட்டுள்ளது.3. கனவுகளின் விளக்கம் (சிக்மண்ட் ·ப்ராய்டின் The Interpretation of Dreams என்ற நூலின் சுருக்கமான தமிழாக்கம்.) ஸ்நேகா வெளியீடு, சென்னை முதல் பதிப்பு ஜுலை 2003.4. ஏழாவது சுவை (கவிதைத் தொகுப்பு). சந்தியா பதிப்பகம் வெளியீடு, சென்னை, 2002.5. பாரசீக கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள் (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்). சந்தியா பதிப்பகம் வெளியீடு, சென்னை, 2002.6. கப்பலுக்குப் போன மச்சான், சந்தியா பதிப்பகம் வெளியீடு, சென்னை, 2002.
(2003-ன் சிறந்த குறுநாவல் என்று எழுத்தாளர் சுஜாதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டது).
7. திரௌபதியும் சாரங்கப் பறவையும் (சிறுகதைத் தொகுப்பு). சந்தியா பதிப்பகம் வெளியீடு, சென்னை, 2002.8. உமர் கய்யாமின் ருபாயியாத். (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்). ரூத் புக்ஸ் வெளியீடு, சென்னை, 2002.9. அடுத்த விநாடி. (சுய முன்னேற்ற நூல்). கிழக்கு பதிப்பக வெளியீடு. சென்னை, அக்டோபர் 2004. 2007 புத்தகக் கண்காட்சியில் இந்த நூல் குறுந்தகடாகவும் கிழக்கு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.10. ஹிதாயதுல் அனாம் (இறைநேசர்களைப் பற்றிய தமிழ் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு.) இர்·பான் மஜ்லிஸ் வெளியீடு, கொழும்பு, பிப்ரவரி, 2000.11. பிருந்தாவனில் வந்த கடவுள். (சிறுகதைத் தொகுதி). கனடாவிலிருந்து குறுந்தகட்டில் மின்புத்தகமாக வெளிவந்துள்ளது.12. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம். கிழக்கு பதிப்பகம். முதல் பதிப்பு, மே 2004. இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2004. சென்னை. பக்கங்கள் 536. விலை ரூ. 200 /-
இந்த நூலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் 2004-ம் ண்டுக்கான விருது கிடைத்தது.
13. காமராஜ் : கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை. கிழக்கு பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு. ஜுன் 2004. பக்கங்கள் 152. விலை ரூ. 50 /-14. திராட்சைகளின் இதயம். (நாவல்.) கிழக்கு பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு. ஜனவரி 2005. பக்கங்கள் 182. விலை ரூ. 75 /- இந்நாவவல் எம்.·பில். பட்ட ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழக மாணவியால் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது.

15. ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடன்ட்ஸ். (மாணவர்களுக்கான சுயமுன்னேற்ற நூல்). முதல் பதிப்பு செப்டம்பர் 2005, கிழக்கு பதிப்பகம், சென்னை.
16. உடல் மண்ணுக்கு. பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷர·பின் வாழ்க்கை வரலாற்று நூல். ங்கிலத்தில் அவர் வெளியிட்ட In the Line of Fire என்ற நூலின் ஆதாரப்பூர்வமான மொழி பெயர்ப்பு. முதல் பதிப்பு ஜனவரி, 2007, கிழக்கு பதிப்பகம், சென்னை.
17. ஹோமரின் இலியட் யுத்த காவியம். (24 காண்டங்களும் உள்ளடங்கிய முழு நூல்). முதல் பதிப்பு ஜனவரி 2007, கிழக்கு பதிப்பகம், சென்னை வெளியீடு. ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்.
18. ஆல்·பா தியானம்.
nagoor_b.jpg
19. நல்ல  மனதில் குடியிருக்கும் நாகூர்
sorkalinseenapperunjuvarmunattai1.jpgmutradhapullimunattai1.jpg
 

 

20. முற்றாத புள்ளி — கட்டுரைகள் நாகூர் ரூமி. முதல் பதிப்பு அக்டோபர் 2007.பக்கங்கள் 160. விலை ரூபாய் 65/- நேர் நிரை வெளியீடு.

21.சொற்களின் சீனப்பெருஞ்சுவர்கட்டுரைகள்நாகூர் ரூமி. முதல் பதிப்பு அக்டோபர் 2007.பக்கங்கள் 160. விலை ரூபாய் 65/- நேர் நிரை வெளியீடு.

விரைவில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளிவர இருக்கும் நூல்கள்:
22. சவ்ரவ் வாழ்க்கை வரலாறு. தமிழாக்கம்.
23. சூ·பித்துவம்
இதல்லாமல் நாகூர் ரூமி பல ஊர்களிலும் Personality Development தொடர்பாக சிறப்புரைகள் ற்றியுள்ளார். ஆல்·பா தியானம் போன்றவற்றில் பயிற்சியும் கொடுத்து வருகிறார். சன் டிவி, ஜெயா டிவி, தமிழ் ஒளி கிய தொலைக்காட்சிகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். ஈரோட்டில் இருக்கும் சென்னை சில்க்ஸ் நிறுவன ஊழியர்களுக்கும், பல கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கும் ஆளுமைத் திறன் வளர்ச்சி பற்றிய பயிற்சிகளைக் கொடுத்துள்ளார்.
 

 

மொழிபெயர்ப்பு :

கனவுகளின் விளக்கம் : சிக்மன்ட் ஃப்ராய்டு

மஸ்னவி கதைகள் , கவிதைகள்

உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு – வைக்கம் முஹம்மது பஷீர்

கட்டுரைகள் :

தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும் [ எதிர்வினை | ரூமி பதில் ]

மைலாஞ்சி – பலவீனமும் பலமும் (புது எழுத்து – 4, 2002)

இஸ்லாத்தில் கவிதை

அரும்பு

குறுநாவல்கள் :

குட்டியாப்பா

தொடர்கதை :

கப்பலுக்குப் போன மச்சான்

களம்

அலைகள்


ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?

from http://valaippoo.yarl.net/archives/000326.html

1.முதலில் நல்ல சிறுகதைகளைப் படிக்க வேண்டும்.(நல்ல சிறுகதை என்பதற்கு என்ன இலக்கணம் என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதது. அதற்கு இதுதான் இப்படித்தான் என்று நான் ஏதாவது சொல்லப்போக அது என்னுடைய கருத்தை மட்டும் திணிக்கின்ற முயற்சியாகிவிடும். அப்படியானால் இந்தப் பிரச்சனையை சமாளிப்பதெப்படி? இப்படித்தான் :தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்கள் என்று எல்லாராலும் அல்லது பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களைப் படிப்பது.உதாரணம் : புதுமைப்பித்தன், லா.ச.ரா., தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், வண்ணதாசன், வண்ண நிலவன், அசோகமித்திரன், கி.ராஜ நாராயணன், இப்படி ‘ஜாம்பவான்’கள் லிஸ்ட்டில் உள்ள எல்லாரையும் ஒரு மூச்சு படித்துவிடுவது நல்லது.உப குறிப்பு : படித்துவிடுவது என்றால் ஒரு கதையைப் படித்துவிட்டு அதன் ‘கதை’ என்ன என்று தெரிந்து கொள்வது அல்ல. ஒரு குறிப்பிட்ட எழுத்தாளனின் எழுது முறையைப் புரிந்துகொள்வது. அப்படீன்னா என்று கேட்பீர்களேயானால் இந்த முதல் டிப்ஸ¤க்கே ஒரு நூறு பக்கம் எழுத வேண்டிவந்துவிடும். எனினும் உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்;“கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” என்று புதுமைப்பித்தனின் ஒரு கதை. அதில் கந்தச்சாமிப்பிள்ளையை கடவுள் சந்தித்து நடக்கும் விஷயங்களையெல்லாம் எழுதிக்கொண்டு போவார். இதில் யதார்த்தமான ஒரு இழையும் நடக்காத ஒரு இழையும் பின்னிப் பிணைந்துள்ளது. அதை எப்படி புதுமைப்பித்தன் செய்கிறார், கடவுளை சென்னையின் தெருக்களில் உலாவவிட வேண்டிய நோக்கம் என்ன, அதை அவர் எப்படியெல்லாம் செய்கிறார் என்று புரிந்துகொள்வது கதையையும் புரிந்துகொண்டதாகும், அதையொத்த இழைகளை நாம் எப்படி எழுதலாம் என்றும் புரிந்துகொண்டதாகும்.இரா.முருகனைப் படித்தால் எத்தனை விஷயங்களை ஒரு எழுத்தாளன் உள்வாங்க வேண்டியுள்ளது, அதுவும் ஒரு சில நொடிகளுக்குள், ஒரு கம்ப்யூட்டர் மாதிரி, என்று ஒருவன் புரிந்துகொள்ள முடியும்.ஒரு விஷயத்தை குவி லென்ஸின் வழியாகவும் பார்க்கலாம். அதன் ஒட்டுமொத்தப் பின்னணியிலும் பார்க்கலாம். Bird’s eye view என்பார்களே அதைப்போல. வண்ணதாசன் கதைகளைப் படித்தால் இதைப் புரிந்துகொள்ளலாம்.2. இப்படியாக இப்படியாக…ஜாம்பவான்களைத் தவிர்த்து, இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் கதைகளையும், அவர்கள் பிரபலமானவர்களாக இல்லாவிட்டாலும் சரி, படிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் பிரபலமாகாதவர்களை தேடிச்சென்றே படிக்கலாம்.உதாரணமாக ஆபிதீன் திண்ணை இணைய வார இதழில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். நகைச்சுவை என்ற ஒரு அற்புதமான விஷயத்தை அவர் எப்படிக்கையாளுகிறார் என்பதை அவர் கதைகளைப் படிப்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.“ராமர் திருவடி” என்று ஒரு கதை. ஆர் வெங்கடேஷ் எழுதியது. முதல்மழை என்ற அவரது தொகுப்பில் உள்ளது. இந்த ஒரு சோறு போதும். மனவயிறை நிறைப்பதற்கு. ஒரு கருத்து அல்லது நம்பிக்கை என்பதன் பின்னணியில் உள்ள பரிமாணங்கள் எவையெவை என்பதை அந்தக்கதை அழகாகச் சொல்லும். ஒரு விஷயத்தை எப்படிப் பார்ப்பது அல்லது எப்படியெல்லாம் பார்க்கலாம் என்று கற்றுக்கொள்ளலாம்.களந்தை பீர்முஹம்மது என்று ஒருவர் எழுதிக்கொண்டிருக்கிறார். சொல்லவரும் விஷயத்தில் எழுத்தாளன் கலந்துகொள்ளாமல் விலகி நின்று எழுதுவது எப்படி என்று அவர் கதைக¨ளைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம். (இதுதான் சரி என்று சொல்லவரவில்லை. இது ஒரு முறை)ஜீ.முருகன் என்று ஒருவர். அற்புத யதார்த்தம் என்பதை யதார்த்தமாகவே மாற்றிவிடக்கூடிய எளிமையுடன் இவர் எழுதுகிறார்.3. எழுதுவது.ஆமாம். முதலில் எதையாவது எழுதிப்பழக வேண்டும். அன்றாடம் ஐந்து பக்கங்கள் எழுதுவது என்று முடிவெடுத்து பெர்னார்ட்ஷா எழுதினானாம். ‘வந்துகொண்டிருந்தான்’ என்ற வாக்கியத்தை — ஆங்கிலத்தில்தான் — எழுதும்போது ‘வந்துகொண்டி’யில் ஐந்தாவது பக்கம் முடிந்துவிடுமானால், அடுத்த நாள் முதல் பக்கத்தில்தான் ‘ருந்தான்’ என்று தொடங்குவானாம்! இந்த தீர்மானிக்கப்பட்ட உழைப்பு தேவைதான். சித்திரம் மட்டுமல்ல, சிறுகதையும் கைப்பழக்கம்தான் என்பது போகப்போக புரிந்துவிடும்.4. ஒரு சிறுகதையின் தொடக்கம்.இதில் கவனம் தேவை. இது எப்படி இருக்கவேண்டும் என்று விலாவாரியாகச் சொல்ல முடியாது. என்றாலும் இப்படிச் சொல்லலாம். முதல் வரியை அல்லது வாக்கியம் அல்லது பாராவைப் படித்தவுடனேயே தொடர்ந்து படிக்கவேண்டும் என்று வாசகனுக்குத் தோன்ற வேண்டும். சிறுகதைக்கு என்றல்ல, எல்லா எழுத்தின் வெற்றிக்கும் இது அடிப்படைத் தேவை.5. முடிவுமுடிவு ஒரு சிறுகதைக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இன்னும் முடியவில்லை என்று தோன்றுகிறமாதிரிகூட ஒரு முடிவு அமையலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை முடிவில் ஒரு முத்திரை இருக்க வேண்டும். யாருடைய முத்திரை? எழுதியவனின் கையெழுத்து கடிதத்தின் கடைசியில் இருப்பதைப்போல, சொல்லவரும் விஷயத்தை முடிக்கும் இடத்தில் எழுத்தாளன் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.எனது குட்டியாப்பா கதையில் குட்டியாப்பா என்பவர் எசகுபிசகாக ஆங்கிலம் பேசுகின்ற ஒரு பாத்திரம். நான் உங்களுக்கு எப்போதுமே உதவியாகத்தான் இருப்பேன் என்றுசொல்ல, “நா உங்களுக்கு எப்போதுமே ப்ராப்ளம்தான் தம்பி” என்று — ரொம்ப சீரியஸாகவும் சின்சியராகவும் — சொல்பவர். அவர் இறந்து போவதோடு கதை முடிகிறது. அவர் ஆஸ்பத்திரியை விட்டு தன்னை குணப்படுத்தித்தான் கொண்டுபோகவேண்டும் என்று அவர் பாணியில், “தம்பி, bodyயெ close பண்ணித்தான் கொண்ட்டுபோவனும்” என்று சொல்வதோடு கதை முடியும். அது அப்படித்தான் முடிய வேண்டும். கதையின் ஒட்டு மொத்த அழுத்தமும் வாசகனுக்குள் அப்போது இறங்கும்.

ஆரம்பம் முடிவு என்ற இரண்டையும் ஒரு உத்தி சார்ந்த விஷயமாகக் கருதலாம்.
6. தலைப்பு
எனக்கு சிறுகதையின் தலைப்புகூட முக்கியம். தலைப்பைப் படித்த உடனேயே கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று நான் நினைப்பேன். ஒருமுறை படுக்கப் போனபோது கற்பனையில் “ரஷ்யம்” என்று ஒரு தலைப்பு தோன்றியது! ஆமாம். தலைப்பு கவர்ச்சியாக இருக்கிறதே என்று அதற்காக ஒரு கதை எழுதினேன். அது கணையாழியிலும் வந்தது. ஆனால் நான் எழுதிய கதைகளிலேயே மிக மட்டமான கதையாக அது போய், அதை என் எந்த சிறுகதைத் தொகுதியிலும் சேர்க்க வேண்டாம் என்று நான் முடிவு செய்தது வேறுவிஷயம்! ஆனாலும் எனக்கு, இன்றும்கூட, தலைப்பும் முக்கியம்தான்.
7. எழுதும் நேரம்
எனக்கு எழுதும் நேரம் என்பது எப்போதுமே இரவு 10க்கு மேல்தான் தொடங்கும்! இரவின் அமைதி, தொந்தரவின்மை, நிசப்தம் இவையெல்லாம் தங்குதடையின்றி எழுத எனக்கு உதவும். அந்தக்காலத்தில் ஒரு நோட்டில் எழுதி எழுதி பின் படித்துப் பார்த்து பாராக்களை 1, 2, என்று எண்களிட்டு பின்பு அதன்படி மாற்றி fair பண்ணுவேன். இப்போது கம்ப்யூட்டரும் முரசும் இருப்பதால் அந்தப் பிரச்சனையில்லை. நேரம் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது உங்களை எழுதவிடுகிற நேரமாக இருக்க வேண்டும்.
8. தூண்டுதல்
எதைப்பற்றி எழுதுவது? எதைப்பற்றி வேண்டுமானாலும். நான் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன். அதில் ஒரு வரி வரும். அது என்னை என்னவோ செய்யும். உடனே ஒரு கதை. ரோட்டில் ஒரு நாய் போகும். அல்லது எதிர்வீட்டில் உள்ளவன் தன் வீட்டுக்குள் கேட்காமல் புகுந்த ஆட்டை கட்டிப்போட்டு கதறக்கதற அடிப்பான். அதைப்பார்க்கவோ அதற்காக பரிந்து பேசவோ நேரிடும். அது என்னவோ செய்யும். இப்படியாக ஒரு நாளின் 24 மணி நேரமும் — விழித்திருக்கும் நேரம் தூங்கும் நேரம் எல்லாமே — கனவுகண்டுகூட நான் கதை எழுதியிருக்கிறேன் — கதைக்கான களங்கள்தான்.
எந்த நேரமும் நமக்கான அந்த அருள்பாலிப்புகளை மொழிபெயர்க்கத் தயாராக இருக்க வேண்டும். தூண்டப்பட்டு எழுதலாம். அல்லது நம்மை நாமே தூண்டிக்கொண்டு — ஒரு போட்டிக்காக — எழுதலாம். எதுவுமே தவறில்லை. அது நம்முடைய சொந்த அனுபவமாக இருக்கலாம். அடுத்தவருடைய அனுபவமாக இருக்கலாம்.
அனுபவம் என்பதே ஒரு விஷயத்தை உள்வாங்குவதுதான். அதற்கு உடல் தொடர்பிருக்க வேண்டியது ஒரு கட்டாயமில்லை.

மும்மது நபி தன் இறுதிச்சொற்பொழிவில் இப்படிக்கூறினார்கள், “இங்கு வந்திருப்பவர்கள், நான் சொன்னதை வராதவர்களுக்குச் சொல்லுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களைவிட சரியாகப் புரிந்துகொள்ளக் கூடும்”! ஆமாம். ஒரு இயேசுவின் அவஸ்தைகளைப் புரிந்துகொள்ள நம்மை மனச்சிலுவையில் அறைந்துகொண்டால் போதும்.

9. முடிவு
ஒரு சிறுகதையை எழுத முடிவு செய்துவிட்டு தொடங்கிவிட்டால் அதை முடித்துவிட்டுத்தான் அடுத்த காரியத்துக்கு போகவேண்டும். அதற்காக ஒரே ‘சிட்டிங்’கில் எழுதி முடித்துவிட வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படியும் எழுதலாம். விட்டுவிட்டும் எழுதலாம். சொல்லப்போனால் பல் வேறு மன நிலைகளில் பல்வேறுவிதமான கற்பனைகள் வரும். ஆனால் எடுத்த ஒரு வேலையை முடிக்கும்வரை வேறு கவிதை எழுதுகிறேன், நாவல் எழுத ஆரம்பிக்கிறேன் என்று போவது அவநம்பிக்கையில் கொண்டுபோய் விட்டுவிடும்.

10. கடைசியாக..
இதெல்லாம் சொல்வதற்கு யார் இந்த நாகூர் ரூமி என்று கேட்பீர்களேயானால், ஒரு நல்ல சிறுகதையாசிரியனுக்கு உரிய தகுதி உங்களுக்கு வந்துவிட்டது என்று அர்த்தம். ஜோராக எழுதுங்கள்.

 

14 பின்னூட்டங்கள்

 1. sreenivasan said,

  20/06/2010 இல் 07:33

  Sir,
  I have read Alpha Dhyanam and I want to meet you to know more about Alpha .Iwant to practice Alpha Dhyanam . Will you please Sir tell me Where I can meet you and when.I will be thankful if Iam given a chance to meet you and to know more about Alpha.
  Thank you,
  sreenivasan
  Chennai.

 2. 22/06/2010 இல் 17:47

  Dear Srinivasan, thank u for the mail. I am conducting Alpha classes once a month in Chennai itself, most probably in Surya Hospital top floor on a Sunday. This month I am busy. I shall conduct the class in July on a Sunday. If u can sms ur mobile no or email me to ruminagore@gmail.com I shall inform you in advance.

  anbudan
  Rumi

 3. Abdul malik said,

  19/08/2012 இல் 13:39

  Assalamunalaikum,
  every day i have read your book adutha vinadi for boosting my life i love a book, sir why you not have a beard you are not like a muslim

 4. 28/03/2014 இல் 05:48

  Sir I thank You for every day because ur books lot of changes in my life.. specialized book AlfaDiyanam..sir l want more in Alfa…when I meet u…where is ur yoga class

 5. நாகூர் ரூமி said,

  31/03/2014 இல் 21:27

  Please contact Mr Magesh the Coordinator for alpha class. His mobile no is: 9677044743

 6. 12/04/2014 இல் 05:40

  Good morning sir when will start this month program…. where.. I eagerly waiting please give the date…sir Thank you… Always Happy

 7. sdevendran said,

  14/12/2014 இல் 14:35

  i like ur sppeach sir hands off

 8. BALAJI said,

  17/12/2014 இல் 21:49

  Want to know alpha class date

 9. 17/02/2015 இல் 10:12

  Sir Good Morning,when and where your next Program…

 10. nawshad said,

  22/04/2015 இல் 10:00

  நாகூர் ரூமி சேர் அவர்கட்கு,,
  இலங்கையிலிருந்து தீரன் ஆர்.எம். நவ்ஷாத்—-
  அஸ்ஸலாமு அலைக்கும் சேர்

  சூபித்துவம் ஒரு எளிய வழி என்ற தங்களது நூல் வாசித்தேன். அந்நூலின் அருட்டுனர்வால் ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தேன்.. கிடைத்ததோ தெரியாது.

  தங்களை மின் தளங்களில் தேடிக்கொண்டிருந்தேன் … இன்றுதான் அகப்பட்டீர்கள் … தங்களைப் பற்றிய தகவல்கள் அறிந்து வியந்தேன்.. மகிழ்ந்தேன்..

  தங்களது அந்த ஒரே ஒரு நூல்தான் இங்கு வாசிக்கக் கிடைத்தது .. ஏனைய நூல்களை இலங்கையில் நான் எங்கே பெறலாம் … பிரபல புத்தக கடைகளில் காணக் கிடைக்கவில்லை..

  சூபித்துவ நூல் என்றாலே சிலர் விற்பதில்லை… நான் இலங்கை கல்முனை சூபி மன்ஸிலில் ஒரு சாதாரண உறுப்பினன். அல்பா தியானம் இங்கு சொல்லித்தரப்படுவதில்லை.

  தங்கள் சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள் சூபித்துவ நூல்கள் முழுவதையும் பெற்றுக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்… கூரியர் சேவை மூலமாக எனக்கு அனுப்ப முடியுமா..?

  தங்கள் பதிலை வெகு ஆவலுடன் காத்திருக்கின்றேன்…

  நவ்ஷாத் …. 0714457593
  பழைய சந்தை வீதி
  சாய்ந்தமருது .01
  ஸ்ரீலங்கா
  rmnawshad@gmail.com

 11. நாகூர் ரூமி said,

  22/04/2015 இல் 21:56

  திரு நவ்ஷாத்துக்கு இப்போதுதான் மின்னஞ்சல் கொடுத்தேன். நன்றி

 12. அனாமதேய said,

  31/03/2018 இல் 15:46

  Hisir
  My name is ganesh. Very thanks for publishing your valuables books. i want to meet with u sir . please give chance
  my mail id : gkvs.ganesh@gmail.com , my number : 7305773325

 13. Somanathan said,

  24/06/2018 இல் 07:44

  Want to know when the alpha class and where?
  Please give me andswer sir


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s