இஜட். ஜபருல்லாஹ்

zafarullah.jpg 

Z. Zafarullah

Dr. Johnson said that the purpose of literature was to delight and teach. And that is what Z.Zafarullah of Nagore has been doing with his writings and public speeches.

He is not only talented but very versatile too. He is a writer,poet,singer and public orator. Though, of late, he has confined himself to public speeches only.

His conversations and speeches would never fail to delight the audience and make a lasting impression upon the listener. Though humorous and at many times sarcastic and pungent, his words are always tinged with social responsibility.

He was born on 15th March 1949 to Aisha Nachiyar and H.Zackariyah who was also a writer and speaker and sometimes wrote under the pen-names of ‘Taj’ and ‘Jeya’.

When someone remarked that Zafarullah looked at least two years older than he acctually was, he retorted saying that would mean that he was an illegitimate child, since his father married only in 1947!.

He graduated in political science and discontinued his B.L course, after completing B.G.L.He has written short stories and articles in magazines like Mani Vilakku, Pirai, Muslim Murasu and Kumudam in his own name and also as ‘Parveen’

He made his debut as a singer at the age of 8, on a stage at Ambakarattur. He became a member of the Indian Union Muslim League, Tamil Nadu Branch, even at the age of 6. He is the State Secretary of IUML, Literary Wings, today.

The devotional poes he wrote are innumerable, of which more than 200 poems alone are on Prophet Muhammad (Sal). Some of the poems have been released on audio cassettes too. He was invited to speak on religous topics to Singapore & Malaysia.

A verocious reader and an ardent lover of Music especially Ghazals, his writing and speeches always shine with sparkling originality, newness and humour. His stress is always on original thinking. He always swims against the tide.

It is very unfortunate that the views of this side-splitting and thought-provoking intellectual are yet to be recorded in the form of a book.

 மாறுதல்
 ———–
 நரக நெருப்பு
 பாவிகளை
 சுத்திகரிக்கிறது…!
 
 சொர்க்கச் சுகமோ
 மெய்யடியார்களை
 மறுபடியும்
 ‘பழைய’ ஆதமாக
 ஆக்கிவிடுகிறது…
 
 -இஜட்-

***

இஜட். ஜபருல்லாவின் ‘இறைவா’ கவிதைகள்  – நாகூர் ரூமி

இஜட். ஜபருல்லாஹ் நாகூர்க்காரர். கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாடு மாநில இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கில் பல பதவிகளிலும் பணியாற்றியவர். பணியாற்றிக் கொண்டிருப்பவர். சுயமாக சிந்தனை செய்யத் தெரிந்த சிலரில் இவரும் ஒருவர். சிறந்த மேடைப்பேச்சாளர். நிறைய கவிதைகளும், சிறுகதைகளும் எழுதியுள்ளார். நாகூரில் மறைந்து வாழும் ஞானாசிரியர் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களிடமிருந்துதான் முறையான சிந்தனை செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டதாக இவர் கூறுகிறார்.

இஸ்லாத்தில் சொல்லப்பட்டதற்கும் செய்யப்படுவதற்கும் இடையிலுள்ள தூரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள இவருடைய சில கவிதைகள் மிக அழகாகச் சாடுகின்றன. இலக்கிய நயத்தோடு கருத்தாழம் மிக்க எளிய கவிதைகளை சுவைத்துப் பார்க்க விரும்புவோருக்கு இதோ இறைவா-கவிதைகளில் சில:

இறைவா
என் ‘இபாதத்’ இலைகள்
சருகாகி வீழ்ந்தாலும்
கிடப்பதென்னவோ உன்
ஏகத்துவ விருட்சத்தின்
காலடியில்தான்

இறைவா
உன்னோடு
அரபு மொழியில் பேசுவதைவிட
அழுகை மொழியில்
பேசும்போதுதான்
உன் அண்மை தெரிகிறது

இறைவா
தொழும்போதுகூட நான்
தூரமாகிறேன்
உன்னை
நினைக்கும்போதெல்லாம்
நெருக்கமாகிறேன்

இறைவா
வானம் வரைகூட
என் எண்ணங்கள்
வியாபிக்க முடிகிறது
இந்த
வார்த்தைத் தடைகள்
என்னை
தரையிலேயே நிறுத்திவிடுகின்றனவே!

இறைவா
உன் அருள் பெட்டகத்துக்கு
பூட்டுக்களே இல்லையெனும்போது
இவர்கள் மட்டும் ஏன்
வெறும் வார்த்தைச் சாவிகளை
பிரார்த்தனை வளையங்களில்
கோர்த்துக்கொண்டு அலைகிறார்கள்?

இறைவா
உண்டுவிட்டு உனக்கு
நன்றி சொல்வதைவிட
பசித்திருந்தும்
உன்னளவில்
பொறுமை கொள்ளும்போதுதான்
என் ஆன்மா
ஆனந்தமடைகிறது

இறைவா
உன்
மகத்துவமிக்க மன்னிப்பால்
மறுபடி மறுபடி
எங்களை
மனிதனாக்குகிறாய்
நாங்களோ
எங்கள் செயல்களால்
மறுபடி மறுபடி
ஷைத்தானாகிறோம்
மறுபடியும் எங்களை
மன்னித்துவிடு நாயனே

இறைவா
தொழுகையில்
உன்னைத் தொலைத்தோம்
வாழ்க்கையில்
எம்மைத் தொலைத்தோம்
‘கலிமா’வையும் நாங்கள்
களவு கொடுக்குமுன்
கரையேற்றிவிடு நாயனே

இறைவா
நீ அனுப்பிய
வேத வார்த்தைகளை
உன் தூதர்
வாழ்க்கையாக்கினார்
இவர்களோ
அவைகளை
மறுபடியும்
வார்த்தைகளாக்கிவிட்டார்கள்

இறைவா
நீ
சேதாரமில்லாமல்
பாதுகாக்கும்
திருக்குர்ஆனை
இவர்கள்
ஆதாரத்துக்கு மட்டுமே
அணுகுகிறார்கள்

இறைவா
நீ
உன் தூதரின்
மனதில் இறக்கி வைத்த
திருவசனங்களை
இவர்கள்
மூளைக்குக் கடத்திவிட்டார்கள்
அதனால்
நம்பிக்கை விழுந்தது
சந்தேகம் எழுந்தது

இறைவா
நீ
எழுத்தில் அனுப்பாத
திருமறையை
இவர்கள்
எண்களுக்குள்
சிறைவைத்து விட்டார்கள்

இறைவா
நீ
தர்க்கத்தை
தவிர்க்கச் சொன்னாய்
ஒற்றுமையை
வளர்க்கச் சொன்னாய்
இவர்கள்
தர்க்கித்தே
பிரிந்து போகிறார்கள்

இறைவா
நீ
மறுமை நாளின்
நீதிபதி என்றாய்
இவர்கள்
நீ மறுமைக்கு மட்டுமே
என நினைத்து
இம்மையின் நீதிபதிகளாக
தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
கரியை வைரமாக்கும்
காரியக்காரனே!
இங்கே
உன் வஹியைச் சுமந்த
வைரங்களெல்லாம்
பணத்தீயில்
கரியாகிக் கொண்டிருக்கின்றனவே
கொஞ்சம் கவனிப்பாயா?

இறைவா
இந்த
‘தவ்ஹீது’க் குயில்களெல்லாம்
ஏகத்துவ கானத்தை
எங்கே தொலைத்தன?

இறைவா
‘ஒதுவீராக’
எனப்பணித்தாய்
இவர்கள்
ஒலிப்பேழைகளாக்கி
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
அடிக்கடி
சிந்திக்கச் சொன்னாய்
இவர்கள்
குழு அமைத்து
நிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
இவர்களுக்கு
அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய
ஏதாவது செய்யேன்

 

 

 

 

Advertisements

1 பின்னூட்டம்

  1. kuthbudeen said,

    18/08/2009 இல் 11:48

    இறைவா
    அடிக்கடி
    சிந்திக்கச் சொன்னாய்
    இவர்கள்
    குழு அமைத்து
    நிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்

    இறைவா
    இவர்களுக்கு
    அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய
    ஏதாவது செய்யேன்….
    **************
    அடிக்கடி சிந்தனை செய்யச் சொன்ன இறைவன்… அச்சமூட்டி எச்சரிக்க, இனியும் என்ன செய்ய முடியும்?
    இறைவனின் சான்றுகளை அடுத்தவர்க்கு எடுத்தியம்பும் அவர்கள், அச்சான்றுகள் குறித்து சிந்தித்து பெறாத படிப்பினை…இன்னுமோர் புதிய ‘அச்சமூட்டியால்’ பெற்றுத் தெளிவார்களா என்ன?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: