Contact : H. Abedeen . E-Mail : abedheen@gmail.com
அக்டோபர் 8, 2008 இல் 12:35 பிற்பகல் (Nagore Writers, அப்துல் கையும், அப்துல் வஹ்ஹாப் பாகவி, ஆபிதீன், இஜட். ஜபருல்லா, இதயதாசன், இஸ்மாயில், கமலப்பித்தன், காதர் ஒலி, குலாம் காதர் நாவலர், சித்தி ஜூனைதா, ஜஸ்டிஸ் இஸ்மாயில், ஜாஃபர் முஹ்யித்தீன், தூயவன், நாகூர் சலீம், நாகூர் பாடகர்கள், நாகூர் புலவர்கள், நாகூர் ரூமி, புலவர் ஆபிதீன், ரவீந்தர், ஹத்தீப் சாஹிப்)
கவிஞர்கள் இதயதாசன் , காதர் ஒலி
ஜூன் 22, 2008 இல் 3:27 பிற்பகல் (இதயதாசன், காதர் ஒலி, நாகூர் எழுத்தாளர்கள்)
‘மீரா ஒரு கவிஞர். ஆனால் கவிதைகளே எழுதவில்லை’ என்பார் சுப்ரமண்ய ராஜூ (நன்றி : கசடதபற) . என் ஊர்க் கவிஞர்கள் பற்றி அப்படிச் சொல்ல மாட்டேன். ஒரு வரியும் எழுதாவிட்டாலும் கூட அவர்கள் ஒப்பற்ற கவிஞர்கள்தான்! ஏதும் எழுதாத நானே எழுத்தாளனாகி விடவில்லையா, அப்படி
ஊர்ப்பற்று வாழ்க!
- ஆபிதீன் -
***

சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடும் கவிஞர் இதயதாசனின் இயற்பெயர் S.M.A. காசிம் மரைக்காயர். பிறந்தநாள் 10.9.1954. இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து கிளைத்த தமிழ்ப்பற்று. இதுவரை எழுதிய பாடல்கள் 10000 த்திற்கும் மேல் என்கிறார். அவைகளில் பெரும்பாலானவை சோபனப் பாடல்கள், பைத்து சபா பாடல்கள். E.M, ஹனீ·பாவைத் தவிர எல்லா இஸ்லாமியப் பாடர்களுக்கும் பாடல் எழுதியிருக்கிறார். எழுதிய நூற்கள் : நாகூர் மீரானின் காரண வரலாறு, இசுலாமிய இசையமுதம், அஜ்மீர் ஹாஜா, ஆரிபு நாயக பாமாலை, வசந்த காலம், நோன்பின் மாண்பு, ரமலான் சிறப்பு, அறுவடைக் காலம். ‘பார் போற்றும் ஆலயம் – நாகூர் தர்கா’ என்ற சிறப்புக் கட்டுரை மாலைமலர் நாளிதழில் சுமார் 3 மாதங்கள் வெளியானது. திருச்சி/காரை வானொலியில் சிலமுறை உரையாற்றியிருக்கிறார். பட்டிமன்றம் கவியரங்கம் பல கண்டதுண்டு.
தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழக நூல் திரட்டுக் குழு உறுப்பினராகவும், நாகூர் தர்கா ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், நாகை வட்ட இளம் எழுத்தாளர் மன்றத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். தற்போது நாகூர் தமிழ்ச்சங்க மக்கள் தொடர்பு செயலாளராகவும், நாகூர் காவல் சரக வி.வி.சி கமாண்டர் மாவட்ட இலக்கிய அணியின் துணைச் செயலாளராகவும் இருக்கிறார்.
‘பாய்மரக் கப்பல்’ என்ற திரைப்படத்திற்கு பாடல் எழுதியிருக்கிறார். (எனவே) படம் வெளிவரவில்லை!. அடைப்புக்குறியை உபயோகிக்க அனுமதி தந்தமை இவரின் ஹாஸ்ய உணர்வுக்குச் சான்று!
குலாம் காதர் நாவலரின் மகனார் வா.கு. ஆரிபு நாவலர் அவர்களிடமும் அவர்களின் மகனார் வா.கு.மு. குலாம் ஹூசைன் நாவலர் அவர்களிடம் பாடம் பயின்றவர். நாகூர் தர்கா பீர்ஜமாவின் ஆஸ்தான கவிஞர் , இன்றளவும். இசை வழியில் , நாகூர் தர்கா ஆஸ்தான வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் அவர்களிடம் வர்ணம் வரை சங்கீதப் பயிற்சி. கூடவே பகுதாது நானா அவர்களிடம் குஸ்தியும் பயின்றிருக்கிறது இந்தக் ‘கவிப்புயல்’. பேரறிஞர் அண்ணாவிடம் 1967ல் வில்லியம் பேனா பரிசு பெற்றதையும், ‘புலவர் கோட்டை’ என்று தன் ஊர்ப் பெயரை குறிப்பிட்டிருந்ததற்காக ஜஸ்டிஸ் இஸ்மாயில் அவர்களிடம் 1979ம் வருடம் பாராட்டு பெற்றதையும் மறக்க இயலாத ‘புயலின்’ ஒரு பாடல் இங்கே :
க(¡)ட்சிகள்
————
நால்வர் சேர்ந்தால் ஒரு கட்சி
நத்தைகள் போல உருவாச்சு
நண்டு சொண்டு இதுகளெல்லாம்
நாலா புறமும் வந்தாச்சு…!
வட்டம் நகரம் ஒன்றியங்கள்
வகையாய் பிரித்து வைத்தாச்சு
மாவட்டம் தோறும் மாநாடு
நடத்திட உண்டியல் எடுத்தாச்சு…!
கொடிகள் தோரணம் கட்டவ்ட்டு
கோஷங்கள் போட்டு வீதியிலே
போக்கு வரத்தைத் தான் தடுத்து
போகுது பாரு ஊர்வலங்கள்..!
எத்தனை நிறங்கள் கொடிகளிலே
எண்ணிப் பார்க்க முடியவில்லை
எத்தனை அணிகள் இவைக்குள்ளே
எல்லாம் பதவியின் தாக்கங்களே…!
மாணவர்க்கென்று ஒரு அணியும்
மகளிர்க்கென்று ஒரு அணியும்
மீனவர்க்கென்று ஒரு அணியும் – விவ
சாயத்திற்கென்று ஒரு அணியும்
இளைஞர்க்கென்று ஒரு அணியும்
இலக்கியம் பேச ஒரு அணியும்
தொழிலா ளர்அணியும் உண்டாமே
தொண்டர் அணியும் உண்டாமே…!
வக்கீல் மருத்துவர் அணிகளுடன்
வகை வகையாக பல முடிச்சு
சட்டை வேட்டையில் கரையிருக்கும்
சமூக அக்கறை இருக்காது…!
***
‘மகசூல் பெருக்கிய மாநபி உம்மத்
மாநிலமெங்கும் மாண்பினைக் கண்டது’ என்று ‘பன்முகப் பெருமான்’ஐப் பாடும் இவருடைய மற்ற பாடல்கள், இன்ஷா அல்லாஹ், விரைவில் !
***
தனது எட்டாம் வயதிலேயே எழுதத் துவங்கி நாகூரின் குறிப்பிடத் தகுந்த கவிஞர்கள் ஒருவராக இன்றும் விளங்கும் காதர் ஒலி பற்றி அவருடைய நண்பர்கள் சொன்னது :
பெயர் :மு.காதர் ஒலி. பெற்றோர் : முஹம்மது தம்பி மரைக்காயர் (குரு முஹம்மது) / ராவியா கனி. பிறப்பு : 1955. முகவரி : 54 சாமுதம்பி மரைக்காயர் தெரு, நாகூர். புனைபெயர்கள் : கவிஞர் கதிர்தாசன், கலைநிலா, கதிரவன். தொழில் : விவசாயம், வியாபாரம். பொழுதுபோக்கு: எழுதுதல்.
இதுவரை இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார். இவற்றில் பாதி பரிகாசப் பாடல்கள், வாழ்த்துப் பாடல்கள் அடங்கும். இவரது காலம் வாழ்த்துப் பாடல்களின் பொற்காலம் எனலாம். பல்சுவைகளில் பாடல் எழுதி புரட்சியை ஏற்படுத்தியவர். இஸ்லாமிய பாடல்களில் தனக்கென்று தனிபாணியை அமைத்துக்கொண்டு எளியநடையில் புதிய வரிகளைப் போட்டு கருத்தாழமிக்க பாடல்களை இயற்றியவர். தமிழ்நாட்டில் அனேகமாக எல்லா பாடகர்களும் வெளிநாட்டில் வாழும் ஏனைய பாடகர்களும் இவரது பாடலைப் பாடி வருகிறார்கள். இளம் புதிய பாடகர்களை உருவாக்கி அரங்கேற்றம் செய்து வைத்தவர்.
மலேசிய வானொலியில் இவர் எழுதிய 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடகங்கள் இன்றும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அனைத்து தமிழ் பத்திரிக்கைகளிலும் வார இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளது. நாகூர் கௌதியா ஸ்கூல் அண்டு விழாவில் தனது 13ஆம் வயதில் தானே எழுதி, இயக்கிய ‘ஓசி சட்டை’ என்ற நாடகத்தில் இவரது ஆசிரியர்கள் நடித்து அரங்கேற்றம் செய்து அறிமுகப்படுத்தி வைத்தது வாழ்வில் மறக்க முடியாது சம்பவமாகும். அதே சமயம் ‘மனவழி’ என்ற இவரது நாடகமும் அரங்கேறியது.
இவரது பாடல்கள் 25 கேசட்டுகளாகவும், 10 சிடிக்களாகவும் வெளிவந்துள்ளன. திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதும் எல்லா ஆற்றல்களையும் பெற்ற இவர் பல வாய்ப்புகள் தேடிவந்தும் அதில் ஆர்வம் காட்டவில்லை. உடனுக்குடன் கவிதை, பாடல் எழுதும் தனித்திறமை வாய்ந்தவர். மெட்டுக்கு பாட்டு எழுதுவதில் வல்லவர். சுயவிளம்பரத்தை விரும்பாதவர். நற்றமிழ்ப் பேச்சாளராக கவியரங்கம், பாட்டு அரங்கம், பட்டி மன்றங்களில் தற்போது கலந்து சிறப்பித்து வருபவர். தமிழகத்தில் உள்ள பல பைத்து சபாக்களுக்கு பாடல்கள் எழுதி கொடுத்துக் கொண்டிருப்பவர். பஞ்ச் டயலாக், இரட்டை அர்த்தத்தில் நகைச்சுவையாகப் பேசுவது, எழுதுவது இவரது சிறப்பு அம்சம். எழுதுவதை தொழிலாக்கிக் கொள்ளாமல் பொழுதுபோக்காகவே எழுதி புகழ் படைத்துக் கொண்டிருப்பவர். இவருடைய கவிதைகள் பாடல்களை தொகுத்து பத்து புத்தகங்களாக வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
***
‘இரும்பு இதயங்களை
உருக்கி யெடுத்து
இன்மலர் சோலையாக்கிய
பொன்மொழிக் காற்று’ என்று தொடங்கும் ‘அற்புத அண்ணலார்’ என்ற புதுக்கவிதை (280 பக்கம்!),
மற்றும்
‘விண்ணளவில் பொன் பொருளை கண்ணெதிரே குவித்தாலும்
வெண்ணிலவை செங்கதிரை கைகளிலே கொடுத்தாலும்
என் மனது என்றென்றும் இறைவனையே நாடும் -என்
இறுதிமூச்சு உள்ளவரை திரு கலிமா ஓதும்’ என்று ஷைத்தானை எச்சரிக்கை செய்யும் பாடல் உட்பட இவரது அனைத்து ஆக்கங்களும் இங்கே விரைவில், இன்ஷா அல்லாஹ் !
