அகமியம் தளத்திலிருந்து விளக்கம்

என்ன வினோதம்! இன்று காலை 11 மணிக்கு சலீம்மாமாவை சந்திப்பதாக இருக்கிறேன். ‘சின்ன எஜமான்’ என்று அழைக்கப்படும் தாதாவின் ஹத்தம் ஆயிற்றே இன்று…சந்திப்பார்களா? சலீம்மாமா எழுதி மர்ஹூம் வாஹித் பாடிய அருமையான பாடலை முதலில் கேளுங்கள் :


அலங்காரவாசலுக்கு முன் பந்தல் போடப்பட்டிருக்கிறது. சுத்துவட்டாரத்து ஜனங்கள் விதவிதமாக நேர்ந்துகொண்டு பலமாதிரி ஐட்டங்களை கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். (நாலைந்து பராட்டக்களைக் கூட நேற்று பார்த்தேன்!). எனக்கும் நேர்ந்துகொண்டு , ‘என்ன கட்டலாம் மச்சான்?’ என்றாள் அஸ்மா.
 
’என்னைக் கட்டித் தொங்கவிடு புள்ளே!’
 
தமாஷ் கிடக்கட்டும், இன்று இணையத்தைத் திறந்தால் சலீம்மாமாவின்  ஒரு பாடல் சம்பந்தமான விளக்கம்  அகமியம் தளத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. ஆக, ஆபிதீன் பக்கங்களை மூன்றாவது நபரும் பார்க்கிறார். சந்தோசம்தான். இறைவன் இருட்டில்தான் இருந்தான் என்கிறார்கள். முன்பு எப்படியோ , ஜனநாயகத்தை நிலைநாட்டுகிறேன் என்று ’நேட்டோ’ படைகள் ஏதாவது ஒரு நாட்டில் நுழையும்போதெல்லாம் இருட்டில்தான் – நம் வள்ளலார் சொல்வது மாதிரி , ‘உரிமை நாயகன்’ – இருப்பதாக எனக்குப் படும்.  என் சந்தேகத்தை விடுங்கள். அகமிய விளக்கத்தைப் பாருங்கள். நன்றி. -ஆபிதீன்
***
 
’அகமியம்’ மெயில் :
 
அப்துல் கையும் எழுதி தங்களின் இணையத்தளத்தி்ல் மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ள ‘இறைவனும் இருட்டும்’ என்ற பதிவுக்கு (பார்க்க : http://abedheen.wordpress.com/2009/04/15/qaiyum_on_salim/ ) பதிலாகவும் விளக்கமாகவும் அமையும் பதிவு :
 
‘இருட்டில் இருந்தான் இறைவன்’ என்று நாகூர் சலீம் அவர்கள் பாடிய பாடல் சரியானதே அதற்கான விளக்கத்தை இலங்கையில் வாழ்ந்து அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மகான் குருபாவா அவர்கள் இலங்கையில் வெளிவந்த “ஞானச் சுரங்கம்” என்ற பத்திகைக்கு எழுதிய கட்டுரை.
 
பதிவைப் படிக்க :

http://www.ahamiyam.co.cc/2011/10/blog-post_206.html

***

Thanks :

Ahamiyam
The Islamic Sufism web in Tamil

« பழைய வரவுகள்