இறைவா…!
இருட்டும் வெளிச்சமும்
எங்களுக்கு
தந்தவன் நீ…!
அதோடு விடாது
இருட்டில் வெளிச்சமும்
வெளிச்சத்துக்குள்
இருட்டையும் புகுத்தி வைத்த
காரணக்காரன் நீ…!
வெயில்
மழை
மாறி மாறி
எங்களுக்கு தந்தாய்..!
வெயிலின் சூட்டிலும்
மழையின் குளிரிலும்
தவிக்கிறோம்…!
என்றாலும்
“சரியான வெயில்”
“நல்ல மழை”
என்றுதான் நாங்கள்
சொல்கிறோம்…!
ஏன்..?
நீ கொடுத்தது
அல்லவா…?
***
கொடுத்ததற்கு நன்றி : இஜட். ஜபருல்லாஹ் (Cell : 0091 9842394119 )
