2012 : முறையீடு

’தானே’ புயல் வீணே போகவில்லை; ’அரசு எந்திரம் நினைத்திருந்தால் பல ஆயிரம் மரங்களை காப்பாற்றி இருக்கலாம்’ என்று அம்மாவின்அடிமை என்பவர் தினமலரில் சொன்னதற்கு, ’யோவ்.. எல்லா மரங்களையும் வேரோடு பிடுங்கி பேங்க் லாக்கரில் வைக்கவா முடியும் ?’ என்று பதில்கொடுத்து சிரிக்கவும் வைக்கிறது. அவர்களை விடுங்கள், நாம் ‘அவனிடம்’ முறையிடுவோம் அழகாக. ஆபிதீன்காக்காவின் ‘முறையீட்டை’ இப்போது பதிவிடுகிறேன். 1947ல் வெளியான ’தர்த்’ படத்தில் வரும் ’பீச்சு பவர்மே(ங்)’ மெட்டில் எழுதியிருக்கிறார். ‘தேன்கூடு’ நூலில் இருக்கிறது. மிகவும் சோகமாக இருந்தால் ஆறுதல் தர  பாலமுரளி கிருஷ்ணாவின் அபூர்வமான சினிமாப் பாடலும் கீழே உண்டு. அதுவும் முறையீடுதான். கேளுங்கள். எழுதிய கவிஞரின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இசையில் தொடங்குதம்மா…! -  ஆபிதீன்

***

முறையீடு – புலவர் ஆபிதீன்

(பல்லவம்)

இன்னும் வருமமோ கூறுவாய் நீயே
இரங்காததேனே? ஓ எம்பிரானே!  (இன்)

(அனுபல்லவம்)

உன்னையல்லால் இனி யாரிடம் சொல்வேன்
ஊர்ஜித மாக நான் தொழு தேனே
தீனசரண் யனே நீ கை விடாதே
தீயவனை இறை யோனே!  (ஓ எம்)

(சரணம்)

ஆரறிவார் மன வேதனைத் தன்னை
ஆண்டனே அல் லாது உன்னை
அறியாமலும் செய் பாபங்கள் தீராய்
அடைக்கலம் யான் இறையோனே  (ஓ எம்)

***

அருள்வாயே நீ அருள்வாயே… -  பாலமுரளி கிருஷ்ணா (இசை: டி. கே. ராமமூர்த்தி) :



Download

***