கஃபா உள்ளே… – ஜபருல்லாஹ் கவிதை

‘காணக் கண் கோடி வேண்டும் கஹ்பாவை‘   என்று பாடுவதற்கு முன்பு கவிஞர் ஜபருல்லா எழுதிய வரிகளை கவனமாக வாசித்துவிடுங்கள். கருத்துணராமல் கல்லெறிய வேண்டாம். வேறொரு முக்கிய விஷயம். ஜபருல்லாநானாவின் அன்புத் தாயார் நேற்று முன் தினம் (3/1/2012) மௌத்’தாகி விட்டார்கள் (இன்னாலில்லாஹி…). கண்ணீருடன் இருக்கும் அவருக்கு உங்கள் அனுதாபங்களையும் தெரிவிக்கலாம். நன்றி.

***

கஃபா உள்ளே…

கஃபா உள்ளே
மூன்று தூண்கள்
இருக்கின்றன
என்கிறார் ஒருவர்.

அவை -
பெண் கடவுள்கள்
என்கிறார் ஒருவர்.

அங்கே
அல்லாஹ் இல்லை
ஆதம்தான் இருக்கிறார்
என்கிறார் இன்னொருவர்.

அல்லாஹ்வுக்குத்தான்  தெரியும்!

***

நன்றி : இஜட். ஜபருல்லாஹ்  | Cell :  0091 9842394119