சோப்பு – சீப்பு – கருணாநிதி

நாகூரில் – இதுவரை கொடுக்கப்படாதிருந்த  மீதி எல்லா வீடுகளுக்கும் – நேற்று ‘இலவச’ வண்ணத் தொலைக்காட்சிப் பொட்டிகள் வழங்கிய ஏழை கருணாநிதி அல்ல இவர். ஏ. கருணாநிதி . அப்பாவித்தனமாக ஹாஷ்யம் செய்வதில் இவருக்கிணை இவர்தான். இந்த க்ளிப்-ஐ நாகேஷ் சம்பந்தமான கட்டுரையில் போடலாம் என்றிருந்தேன். தாஜ் (தன் குறிப்புகளுடன்) சிலமாதங்களுக்கு முன் அனுப்பிய கமலஹாசனின் அந்தக் கட்டுரை  ‘சப்’பென்று இருந்ததாலும் ‘நாகேஷின் தனித்தன்மையே டைமிங்தான். நாய் செத்துப்போச்சுண்ணே, டாமின்னு பேருகூட வெச்சிருந்தேன் என்று சொல்லி முடிக்குமுன், பேரு வெச்சியே, சோறு வெச்சியா? என்று பதில் வந்துவிடும் அவரிடமிருந்து’ என்று ‘காமடியாட்டமாக‘ இல்லாததாலும் விட்டுவிட்டேன். அதைவிட முக்கியம் , மெனக்கெட்டு  ஆபிதீன் பக்கங்களுக்காக தாஜ் டைப்பி அனுப்பிய கட்டுரை ஒரு வருடத்திற்கு முன்பே இட்லிவடையில் வந்துவிட்டது! பதிவிடாததில் தாஜுக்கு ரொம்பவும் கோபம். உடனே ஒரு பயங்கர ‘இஸ்லாமிய’ கட்டுரையை அனுப்பி விட்டார். இன்ஷா அல்லாஹ், நாளை பதிவிடுகிறேன்.

தாஜின் கோபம் நீக்க ஒரு பதிவு போடுவதாக இருந்தால் ‘சோப்பு சீப்பு கண்ணாடி’ படத்தில் ‘வித்அவுட்’டாக ரயிலில் ஏறி நாகேஷ் அமர்க்களம் செய்யும் காட்சியைப் போடனும் என்று இணையத்தில் தேடியபோது அது மட்டும் இல்லை. தோதாக இது இருந்தது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு உத்திகளை யோசிக்கும் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு இந்தக் காமெடியை அர்ப்பணிக்கிறேன். சார், அஸ்மாவின் ஓட்டு இந்தமுறை கண்டிப்பாக ‘தி.மு.க’வுக்குத்தானாம். ‘ஏம்புள்ளே, ‘அம்மா’ ஒவ்வொரு வூட்டுக்கும் அம்பதாயிரம் கொடுத்தா?’ என்று கேட்டேன். ‘இதென்ன கேள்வி மச்சான், அப்ப அஹலுக்குத்தான் ஓட்டு! வரி கட்டுறோம்லெ?” என்கிறாள். வாழ்க அறிவார்ந்த அஸ்மாக்கள்..!

காமெடிக்கு வர்றேன்… கருணாநிதி ஒரு வசனம் சொல்கிறார் பாருங்கள் இதில். அப்படியே நான் துபாயில் புலம்புவது போலவே இருக்கிறது:

‘ஒரு போனஸ் உண்டா, சம்பள உயர்வு உண்டா.. என்னா எஜமான், எனக்கு ஏதாச்சும் சம்பள உயர்வு கொடுங்க, நானும் நாட்டப்போல ஊரைப் போல ஏதோ டெர்லீன்லெ ரெண்டு சட்டய கிட்டய தச்சிக்கிட்டு ராத்திரிலெ சுத்திவர்றேன்னு சொன்னா… ‘உனக்கு எதுக்குடா சம்பளம்.. நீதான் ஒண்டிக்கட்டையாச்சே..’ அப்படீங்குறான் , என்னமோ இவன் விலை கொடுத்து வாங்கிக் கட்டுன தொழுவத்து மாடு மாதிரி…’.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!

***

« பழைய வரவுகள்