குலாம் அலி கஜல்


உஸ்தாத் குலாம் அலியின் MP3 பாடல்களை பதிவிறக்கம் செய்ய இங்கே ‘க்ளிக்’கவும்.

***

எச்சரிக்கை : அடுத்த பதிவு , ஜபருல்லாவின் கவிதைகள் :-)

உமா மகேஸ்வரி : ‘என் செல்ல மகளுக்கு…’

umamaheswari‘நவீனத் தமிழின் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவரான உமா மகேஸ்வரியின் கவிதைப் பின்புலம் வீடு சார்ந்தது. வீட்டின் உறவுகள் – குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளின் உலகம் – சார்ந்தது. வீட்டிலிருந்து விரியும் நிலக் காட்சிகள், வான்வெளி சார்ந்தது. இவற்றுடான உரையாடல் இந்த வாழ்க்கையின் அர்த்தம் குறித்தான தேடலாக விரிவுகொள்கிரது. அதில் தவிர்க்கவியலாது கசியும் துக்கத்தையும் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் உனர்த்துகின் றன. வாசக மனத்தில் கவிதைகளை அழுத்தமாகப் பதியவைக்கும் வகையிலான சிற்றோடையின் நீரோட்டம் போன்ற மொழிநடை உமா மகேஸ்வரியின் தனிச் சிறப்பு’ – ‘இறுதிப் பூ’ தொகுப்பிற்காக காலச்சுவடு பதிப்பகம்.

‘நிஜத்தில் மேற்கண்ட வரிகள் உமா மகேஸ்வரியின் கவிதை வீச்சுக் குறித்த முழுமையான அபிப்ராயமாக நான் கொள்ளவில்லை. பல முகம் கொண்ட அவரது கவிதைகளின் அரூபத்தை அளக்க பெரிய ஆய்வு செய்ய வேண்டும்.’ –  தாஜ் 

***

உமாமகேஸ்வரியின் ‘இறுதிப் பூ’  தொகுப்பிலிருந்து…

என் செல்ல மகளுக்கு…
உமா மகேஸ்வரி

 
என்னுடைய
வெண்ணிறச் செம்பருத்திகள்
காற்றில் எதையோ எழுத
விரிவதைப்
படிதாண்டிப் பார்க்கவியலாமல்
என் பாதங்கள் பனித்து
மூச்சு நிற்கும் அந்த நாள்.
நிசப்தத்தில்
கரு நீலக் குளமாக
மரணம் வரைந்த என்னை
உன் கண்ணீர் சொட்டிக்
கலைத்து விடாதே.
கடந்து பற
உன் வானத்திற்கு.
உன்னைத் தவிர
எனக்கென்று அழ
ஒருவரும் இல்லையென்பது
அழுகையாய்த்தானிருக்கிறது
எனக்கே.
ஆயினும்,
உன்
சிறு கைகளில்
நான் கனக்க மாட்டேன் பிணமாக.
இறக்கவாவது செய்வேன்
நான்,
நானுமற்று நானாக.

*** 
நன்றி:   உமாமகேஸ்வரி ,   காலச்சுவடு பதிப்பகம் தாஜ்

தொடர்புடைய சில சுட்டிகள் :

உமா மகேஸ்வரி கவிதை- ஏதோ ஒரு பறவை - எஸ்.பாபு

உமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை -   கருணாகரன்

உமா மகேஸ்வரி கவிதைகள் – புதுவிசை (கீற்று)

உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்

வாசக அனுபவம்: உமா மகேஸ்வரியின் ‘வெறும் பொழுது ‘  -பி.கே.சிவகுமார்  

« பழைய வரவுகள்