ஹந்திரி – 2008

மனவாக்குக் கெட்டாத மகானது 451-ஆம் ஆண்டு மகோற்சவ தரிசனத்தில் பக்தியும் சிரத்தையுமுள்ள ஏனையோர்கட்கு இம்மையிலும் மறுமையிலும் சுகமடையும் பொருட்டும் நேத்திரானந்தத்தை அனுபவித்து மகிழ்ச்சி அடையும் பொருட்டும் இந்த வலைப்பதிவு மூலமாக இஜட். ஜஃபருல்லாவின் பழைய கவிதையை தெரிவிக்கலாயிற்று.

நியாஸ் (காணிக்கை) அனுப்புகிறவர்கள் , 40 லட்ச ரூபாய் ‘சொந்த’க் காசில் தர்கா முழுக்க பெயிண்ட அடித்த - ஊர் முழுதும் டைல்ஸ் ஒட்டப்போகிற – எதிர்கால M.L.A ஜூட்டா முபாரக் MC அவர்களுக்கு அனுப்பவும்.

- ஆபிதீன் -
நாகூர் கந்தூரி

கைலிக் கடைகளின்

‘கட்-அவுட்’ திருவிழா..!

‘காதல் தேசம்’

‘காதல் கோட்டை’

புடவைகள் பெயர்கள்..!

பூரிப்பில் பெண்கள்…!

·பாரின் சாமான்கள்

மோகத்தில் ஆண்கள்..!

ஹோட்டல் எங்கும்

விடாது ஒலிக்கும்

சட்டுவ சங்கீதம்

முட்டை புறாட்டா

மணம் -

மூக்கின் நுனியில்..!

கடலில் ஓடும்

கப்பல்கள்

தெருவில் ஓடும்

ஊர்வல விந்தை..!

வெடிகள் போட்டு

கொடிகள் ஏறும்

விமரிசையாக..!

நாகூர் கந்தூரி -

இங்கு

இரவிலும் சூரியன்..!

மொழிகளை எல்லாம்

இரண்டறக் கலந்து

செவிட்டில் அறையும்

கேஸட் அலறல்கள்…!

‘மேட்-இன்’

செவ்வாய்க்கிரகம்

என்றும்

முத்திரை குத்தும்

வித்தைக்காரர்கள்..!

தர்ஹா உள்ளே

காணிக்கை எல்லாம்

உண்டியல் போட

கட்டளைக் குரல்கள்..!

பாதைகள் மறித்து

பாத்திஹா கடைகள்

தாயத்து டிசைன்கள்

விற்பனை அங்கு-

மொத்தமாகவும்

சில்லறையாகவும்..!

பால்டின் தகரத்தில்

சிற்ப வேலைகள்..!

அதை

வெள்ளியாய் மாற்றும்

ரசவாதக் கலைகள்..!

கஜல்கள் கவாலிகள்

நாட்டியத்தோடு

களி நடம் புரியும்

இளைஞர் கூட்டம்..!

கமிஷன் போக

மிச்சப் பணத்தில்

கரும் புகையோடு

வாண வேடிக்கை

கோலாகலங்கள்..!

பீர்சாபு எறியும்

எழுமிச்சைப் பழங்களில்

பிள்ளைவரத்தை

தேடும் பெண்கள்..!

சந்தனக் கூட்டில்

பூக்களை வீசிப்

பரவசப்படும்

பக்த கோடிகள்..!

‘ஐயா..தருமம்..!’

என்ற

அபஸ்வரத்தோடு

ஊரே நிறைந்த

பிச்சைக்காரர்கள்..

அவர்களுக்கு

சுகத்தைக் கொடுக்கும்

சோத்துச் சீட்டுக்கள்..!

இன்னும்

தொண்டர் படைகள்

உண்டியலோடு..!

இகபர உலகில்

நண்மைகள் வேண்டி

இரண்டே ரூபாயில்

ஆண்டவர் தரிசனம்..!

இந்த ஆராவரங்களின் மத்தியில் கூட -

அந்த -

மகானை -

நினைத்தும் – துதித்தும்

சில

மனித மனங்கள்…

***

நன்றி : இஜட். ஜபருல்லாஹ்

1 மறுமொழி

  1. nagoreismail சொன்னது,

    ஜூன் 7, 2008 இல் 8:38 மு.பகல்

    “நியாஸ் (காணிக்கை) அனுப்புகிறவர்கள் , 40 லட்ச ரூபாய் ‘சொந்த’க் காசில் தர்கா முழுக்க பெயிண்ட அடித்த – ஊர் முழுதும் டைல்ஸ் ஒட்டப்போகிற – எதிர்கால M.L.A ஜூட்டா முபாரக் MC அவர்களுக்கு அனுப்பவும்.”

    ஹாஹா..
    நானா எப்படி இப்படி எல்லாம்..?
    சரியான சிந்தனை தான்


மறுமொழியொன்றை வழங்குக